நிவேதனம் என்ற சொல்லுக்கே ‘ஆண்டவன் முன்னால் அதை பக்தியோடு அவருக்காகக் கொடுப்பது’ என்று அர்த்தம்

அறிந்து கொள்வோம் நண்பர்களே:-

நிவேதனம் என்ற சொல்லுக்கே ‘ஆண்டவன் முன்னால் அதை பக்தியோடு அவருக்காகக் கொடுப்பது’ என்று அர்த்தம். கடவுளுக்குப் பார்வையிலேயே திருப்தி வரும். ”’த்ருஷ்ட்வா த்ருப்தி.”’ சாப்பிட்டால்தான் திருப்தி என்பதில்லை. அதனால் அவர் முன்பாக வைத்தால் போதும்.

‘சிதறு காய்’ என்று நாம் எறிவது நிவேதனம் என்கிற நோக்கில் இல்லை. அதாவது, ‘உன் முன்னிலையில் பல பேருக்காக இந்தப் பொருளை அளிக்கிறேன்’ என்று அர்த்தம். ‘நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய். உன் பார்வை பட்ட பொருளை பலருக்கு அளிக்கிறேன்’ என்பதுதான் தாத்பர்யம். ‘சிதறு தேங்காய் உடைவதைப் போல என் அகங்காரம் எல்லாம் சிதறுகிறது’ என்பதெல்லாம் நாமாக உருவாக்கிக்கொண்ட விளக்கங்கள்தான்.தேங்காயை உடைத்தால் ரெண்டே ரெண்டு பேருக்குத்தான் கிடைக்கும். அதே நேரம் சிதறுகாயை எல்லோரும் எடுத்துக்கொள்ளலாம். உடைத்த தேங்காயைக்கூட நாமாக அடுத்தவருக்குக் கொடுத்தால்தான் உண்டு. சிதறுகாய் உடைக்கும் போது, ‘இது எனக்கு’ என்று எடுத்துக் கொள்பவர் உரிமையோடு எடுப்பார். கேட்காமலேயே எல்லோருக்கும் பகவானின் பிரசாதத்தைக் கொடுப்பதற்கான தனி வழி சிதறுகாய். இது உசத்தியானது.

நன்றி: சேஷாத்திரிநாத சாஸ்திரிகள்.

நிவேதனம் என்ற சொல்லுக்கே ‘ஆண்டவன் முன்னால் அதை பக்தியோடு அவருக்காகக் கொடுப்பது’ என்று அர்த்தம்
Scroll to top