சாஸ்திரம் என்ன சொல்கிறது? பாருங்கள்!

அறிந்து கொள்வோம் நண்பர்களே:-

சாஸ்திரம் என்ன சொல்கிறது?

இறைவனின் அர்ச்சாமூர்த்திகள்தான் சாஸ்த்திர விதிப்படி எட்டு மூர்த்திகளை முக்கியமாக கருதுகிறது. அவை சைலி {கற்சிலை வடிவம்} தாருமயீ {மரத்தால் பிரதிமை} லௌஹீ {உலோக விக்ரஹம்} லேப்யா {மெழுகினால் ஆன மூர்த்தி} லேக்யா { ஓவிய வடிவம்} ஸைகதி [மண் வடிவம்} மனோமயி { மானசீகமான ரூபம்} மணிமயீ { நவரத்தினங்களில் ஒன்றால் உருவாக்கிக் கொண்டத.

இவை பக்தர்களின் சௌகர்யத்திற்காக அமைந்தவை. எந்த இடத்தில் எந்த மூர்த்தி கிடைக்கிறதோ அதை ஏற்று பூஜிக்க வேண்டும். முக்கியமாக நாம் பூஜிக்கும் மூர்த்தியை சர்வேஸ்வரனாகவே நம்பி மதித்து ஆராதிக்க வேண்டும். அதன் மூலப்பொருள் பற்றிய சிந்தனையே இருக்க கூடாது. நம் பக்திப் பரவசம் அர்ச்சனை வழிபாடு மூலம் அந்த உருவத்திற்கு தெய்வசான்னித்யம் ஏற்பட்டு விடுகிறது. இதைதான் ஆன்றோர்கள் “ ”’அர்ச்சகஸ்ய பிரபாவேன சிலா பவதி சங்கர”” அதாவது அர்ச்சனை செய்யும் பக்தனின் பக்தி மகிமையால் கற்சிலையும் சிவபிரானாகி விடுகிறது.} என்றார்கள்.

திடமான ஆழ்ந்த பக்திதான் முதல் தகுதி. இதைதான் “”’தேவிபூத்வா தேவம் யஜேத்””’ {தெய்வ சொரூபமாகத் தன்னைப் பாவித்துக் கொண்டு தெயவ மூர்த்தியைப் பூஜிக்க வேண்டும்.} என்று சாஸ்த்திரம் கூறுகிறது. இதைதான் கண்ணபிரான் பகவத் கீதையில் உபதேசிக்கிறார். “”பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி, ததஹம் பக்தியுபஹ்ருதயம் அஸ்னாமி ப்ரயதாத்மன”’” { பக்த சிரத்தையுடன் எனக்கு சமர்ப்பிக்கும் எளிய பொருளையும் – அது இலையோ, மலரோ, கனியோ, நீரோ எதுவாக இருந்தாலும் தூய பக்திக்காணிக்கையாக மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன் என்கிறார்..
நன்றி: பக்தி மலர்.

Write a comment…
 
சாஸ்திரம் என்ன சொல்கிறது? பாருங்கள்!
Scroll to top