பூஜையில் பயன் படுத்தக் கூடிய பொருட்கள்!

அறிந்து கொள்வோம் நண்பர்களே:

மண், செம்பு, பித்தளை, வெண்கலம், வெள்ளி, தங்கம் ஆகியவற்றை பூஜையறையில் பயன்படுத்தலாம். மண், பித்தளை, வெண்கலம், வெள்ளி – ஆகியவற்றால் ஆன விளக்குகளும் பாத்திரங்களும் உண்டு. பொருளாதாரத்துக்குத் தக்கவாறு பயன்படுத்தலாம். தூய்மையில் மேற்சொன்ன அனைத்தும் ஏற்கத்தக்கவை.

‘இரும்பு’ பாத்திரங்களைப் பூஜைகளில் பயன்படுத்துவதில்லை. அதற்குச் சுத்தம் போதாது என்கிறது சாஸ்திரம். ‘இரும்பை பயன்படுத்தலாம்’ என்று சில இடங்களைச் சுட்டிக்காட்டும். அங்கு மட்டும் அதற்குப் பெருமை உண்டு. எவர்சில்வர், இரும்பைச் சார்ந்த உலோகம். ஆகையால், பூஜையில் அதைத் தவிர்க்க வேண் டும். பூஜையைத் தவிர மற்ற விஷயங்களில் பயன்படுத்த வாய்ப்பு இருக்கும்போது, பூஜை பயன்பாட்டிலும் விதிக்குப் புறம்பாக எவர்சில்வரை சேர்க்க வேண்டிய கட்டாயம் என்ன?

நன்றி: சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.

பூஜையில் பயன் படுத்தக் கூடிய பொருட்கள்!
Scroll to top