இறைவனை உங்கள் உள்ளத்தில் குடி அமர்த்த……

அறிந்து கொள்வோம் நண்பர்களே:-

ஒரு வீட்டை வாடகைக்கு விடவேண்டுமென்றால் உடைசல். விரிசல்களைப் பூசி வெள்ளையடித்து அதன் பிறகு தான் மனிதர்களை குடி அமர்த்துகிறோம். சாதாரண மனிதர்களை குடிவைப்பதற்கே இத்தனை பிரயத்தனமென்றால் சர்வ வல்லமை படைத்த இறைவனை நம் உள்ளத்தில் குடிவைக்க நமக்குள் இருக்கும் எத்தனை மாசுகளை நாம் துடைத்தெறிய வேண்டும்? அதற்கு நாம் எவ்வளவு அரும்பாடுபட்டு உழைக்க வேண்டும் என்பதை உணரும்போது பெரும்மலைப்பாக இருக்கிறது.

நம் அனைத்து தீய செயல்களுக்கும், நம் தவறான நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் நம் மனமே மூல காரணமாக இருக்கிறது, ஒரு மீன் வியாபாரி இருந்தான், வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பும் போது பெரும்மழை பிடித்துக் கொண்டதால் வழியில் இருந்த அவன் பூக்கார நண்பன் வீட்டில் இரவு தங்கினான், அன்று இரவு முழுக்க அவனுக்கு உறக்கம் வரவில்லை ஏன்? மீன் நாற்றத்திலேயே உறங்கிப்பழக்கப்பட்டவனுக்கு பூவாசம் பெரும் தொல்லையாக இருந்தது,அதேபோன்றுதான் நம் மனம் முடைநாற்றம் வீசும் எண்ணங்களுக்குஉள்ளேயே முடங்கிக் கிடப்பதனால் பக்திப் படியேறி ஞானரதத்தில் பயணம் செய்ய முடியாமல் தட்டுத் தடுமாறி தரங்கெட்டுக் கிடக்கிறோம், நண்பர்களே, எல்லாம் வல்ல எம்பெருமானை பக்தியுடன் வழிபடுங்கள். பலன் பெறுங்கள். பகட்டான செயல்களினால் பல ஒன்றுமில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இறைவனை உங்கள் உள்ளத்தில் குடி அமர்த்த……
Scroll to top