அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்

அறிந்து கொள்வோம் நண்பர்களே:

இன்றைய சிந்தனை:

”’அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. ”’

பொருள் : –
அன்பு வேறு, சிவம் வேறு, இரண்டும் ஒன்றல்ல- தனித்தனியான இரண்டு என்று சொல்லுபவர்கள் அறிவில்லாத மூடர்கள். அன்பே சிவம் என்பதை பலரும் அறியாதிருக்கிறார்கள் . அன்பு தான் சிவம் என்பதை எல்லோரும் அறிந்து விட்டால், பிறகு அவர்களே அன்புருவமான சிவமாய் அமர்ந்திருப்பர்கள்-வாழ்ந்திருப்பார்கள்.

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
Scroll to top