காசேதான் கடவுளடா” என்று சினிமாக் கவிஞர்கள் சொல்லி பாட்டு எழுதுவார்கள். அது ஏற்றுக் கொள்ள முடியாத ஓன்று. பணம் கடவுளுக்குச் சமமல்ல. அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், பொருட்களைப் பெறவும் பணம் ஒரு கருவி. அதை அறிமுகம் செய்தது நாம்தான். பண்டமாற்று வழியில், தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்ட காலமும் உண்டு. ஆக, மனிதன் சிபாரிசு செய்த பணம், கடவுளுக்கு எப்படி இணையாகும்?! ஆகவே, பணத்தை மிகைப்படுத்திப் பார்க்கக்கூடாது. ஒழுக்கம், கல்வி, இரக்கம், கொடை, அன்பு, பண்பு ஆகியவையே உண்மையான செல்வங்கள். இவற்றைக் கடவுளுக்கு நிகராகச் சொல்லலாம். ஏனெனில், நாம் கடவுளை நெருங்குவதற்கு இந்தக் குணநலன்களே உதவி செய்கின்றன.
காசு கடவுள் அல்ல!