அறிந்து கொள்வோம் நண்பர்களே:-
”மஞ்சள் உடை அணிந்தவன்’ என்று கண்ணனைக் குறிப்பிடுவோம். நீல உடை அணிந்தவன் பலராமன். புலித்தோல் அணிந்தவன் பரமேஸ்வரன்.
அதேபோல், கண்ணனுக்கு வெண்ணெய் பிடிக்கும். குசேலன் கொடுத்த அவலை, பிரியத்துடன் உட்கொண்டார் அவர். எனவே, அவலும் கண்ணனுக்குப் பிடிக்கும். ‘அம்பாளுக்குச் சர்க்கரைப் பொங்கல் பிடிக்கும்’ என்கிறது லலிதா சஹஸ்ரநாமம். பிள்ளையாருக்குக் கொழுக்கட்டையும், முருகனுக்குத் தேனும் தினைமாவும் பிடிக்கும்.
பூக்கள் மற்றும் இலைகளை எடுத்துக் கொண்டால், விஸ்வேஸ்வரன் வில்வபத்திரத்தில் மகிழ்வார்; தும்பைப் பூவும் அவருக்குப் பிரியமானது. மகாவிஷ்ணுவுக்குத் துளசி இலை பிடிக்கும். அம்பாளுக்குப் பாடல புஷ்பம் பிரியம். இவை அத்தனையும் புராணத் தகவல்கள். இந்தத் தகவல்களைக் கொண்டு நாமும் விதவிதமான பதார்த்தங்களை; பூக்களை; இலைகளைப் பயன்படுத்துகிறோம். நன்றி: சேஷாத்திரிநாத சாஸ்திரிகள்.