தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
நன்றி—–சஞ்சிகை ஒன்றில் இருந்து:
மருத்துவக் குறிப்பு:
வைத்தியம் – வேம்பு எனும் அருமருந்து:-
துளசி, வில்வம், அறுகு, வன்னி வரிசையில் வேம்பும் ஓர் அற்புத மூலிகையே. இவை அனைத்துமே நோய் தீர்க்கும் நல்மருந்துகள். வேப்ப மரத்தின் அனைத்துப் பாகங்களும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தக்கூடியவை.
வேப்பிலையை நீர்விட்டுக் கொதிக்க வைத்து, சூடு ஆறியதும் அதில் முகம் கழுவிவந்தால், சருமம் பளபளக்கும். தினமும் வேப்ப இலைகளைக் குளிக்கும் நீரில் போட்டு, சுமார் ஒரு மணி நேரம் கழித்துக் குளித்தால் சரும நோய்கள் எதுவும் நெருங்காது.
உடலில் ஏதேனும் அலர்ஜி ஏற்பட்டிருந்தால், வேப்பிலையை அரைத்து உடலில் பூசி, சுமார் ஒரு மணி நேரம் கழித்துக் குளித்தால் நிவாரணம் கிடைக்கும். அதுமட்டுமல்ல… வேப்பங்கொழுந்தை அரைத்து ஓர் உருண்டை அளவு எடுத்துத் தேனில் நனைத்து விழுங் கினால், எப்படிப்பட்ட அலர்ஜியும் காணாமல் போய்விடும்.வேப்பிலைச் சாற்றுடன் மோர் கலந்து குடித்துவர வயிற்றுப்பூச்சிகள் ஒழியும். வேப்பங்கொழுந்தை அரைத்துச் சாறு எடுத்து, அதனுடன் தேன் சேர்த்து இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தாலும், வயிற்றுப்பூச்சிகள் இறந்துவிடும்; அல்லது வெளியேறிவிடும்.
வேப்பம்பூவை ரசம், துவையல் என ஏதேனும் ஒரு வடிவத்தில் சாப்பிட்டுவந்தால், வயிற்றுப்பூச்சிகள் விலகுவதோடு நோய் எதிர்ப்புச்சக்தி கிடைக்கும். குறிப்பாக, இதைக் குழந்தைகளுக்குக் கொடுத்துவருவது மிகவும் நல்லது.
தகவல் தொகுப்பு: பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா.