பூமி உருண்டை என்று கண்டு பிடித்தவர்கள் நம் முன்னோர்கள். விஞ்ஞானிகள் அல்லர்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

பூமி உருண்டை’ என்கிற உண்மையை 450 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஸ்பானிஷ் கப்பல் பயணியான ‘மெகல்லன்’ கண்டுபிடித்ததாகச் சொல்வர். ஆனால், பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே, வேதமும் அதையொட்டிய நூல்களும் பூமி உருண்டை என்றே சொல்லி வந்தன. ‘அண்டம்’ முட்டை வடிவம் என்கிறது புராணம். வேத காலத்து வேதம் ஓதுபவர்கள், ‘அநேக கோடி ப்ரம்மாண்டானாம் மத்யே’ என்று சங்கல்பம் செய்வதுண்டு. படைப்பவன் முதலில் நீரைப் படைத்தான். அதன்பிறகு, அதில் ப்ரம்மாண்டத்தை, அதாவது உருண்டை வடிவில் பூமியைப் படைத்தான் என்கிறது புராணம்.
பல உதாரணங்களைக் காட்டி… எலுமிச்சைப்பழம், எறும்பு, கப்பல் – கொடிமரம் என்றெல்லாம் விளக்கி, குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள் இன்றும் உள்ளனர். சந்திரனில் மண்ணும் நீரும் இருப்பதை வேதமும் ஜோதிடமும் பறைசாற்றியும் காதுக்கு எட்டவில்லை நம்மவர்களுக்கு. அதேநேரம், இன்றைய நம்மவன் (நிகழ்காலத்தில் வாழும்) `ஒருவனே கண்டுபிடித்தான்’ என்று எழுதவும் துணிகிறார்கள். பழைய சோறு, இன்டர்நேஷனல் பேக்கிங்கில் யு.எஸ் முத்திரையுடன் வந்தால், அதை வாங்கிப் பெருமைப்பட்டுக்கொள்ளும் பெரியோர்களும் நம்மில் உண்டு. அடிமைத்தனத்துக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது.
-ஆன்மிக மலர் ஒன்றில் பிரம்மஸ்ரீ சேஷாத்திரி நாத சாஸ்திரிகள்.

பூமி உருண்டை என்று கண்டு பிடித்தவர்கள் நம் முன்னோர்கள். விஞ்ஞானிகள் அல்லர்.
Scroll to top