நமது தர்மசாஸ்திரங்கள் ஒட்டுமொத்தமாக ஆணாதிக்கத் தனமாக இருக்கவில்லை

நன்றி—நீர்வை மயூரகிரிசர்மா.

 

கணவன் தொலைந்து போய்விட்டாலோ, மரணமடைந்தாலோ, துறவியாகி விட்டாலோ, ஆண்மையற்று இருந்தாலோ, நடத்தையில் வீழ்ந்தாலோ இந்த ஐந்து சூழல்களிலும் பெண்கள் வேறொரு கணவனைத் தேடிக்கொள்ளலாம் என்று விதிக்கப்பட்டுள்ளது.

– பராசர ஸ்மிருதி, 4.30 (காலம்: பொ.யு 1-3ம் நூற்.)

நமது தர்மசாஸ்திரங்கள் ஒட்டுமொத்தமாக ஆணாதிக்கத் தனமாக இருக்கவில்லை, பல இடங்களில் நாம் வியப்படையுமளவுக்கு பெண்ணுரிமைகளை முன்னெடுப்பதாக இருக்கின்றன என்பதற்கு இந்த சுலோகம் ஒரு சான்று. “கணவனை இழந்தார்க்குக் காட்டுவது இல்.. “ என்று சிலப்பதிகாரம் கைம்பெண்ணின் துயரம் பற்றிப் புலம்புவதற்கு முற்பட்ட காலத்திலேயே இந்த ஸ்மிருதி எழுதப்பட்டிருக்கிறது, இதன் நடைமுறைகள் புழக்கத்திலும் இருந்திருக்கலாம் என்பதைக் கவனிக்க வேண்டும்.

நஷ்டே ம்ரு’தே ப்ரவஜிதே க்லீபே3 ச பதிதே பதௌ
பஞ்சஸ்வாபத்ஸு நாரீணாம் பதிரன்யோ விதீ4யதே.

பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர்,( E Magazine Editor)
இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனம்.
Modern Hindu Culture.Org
www.modernhinduculture.com
நமது தர்மசாஸ்திரங்கள் ஒட்டுமொத்தமாக ஆணாதிக்கத் தனமாக இருக்கவில்லை
Scroll to top