எப்படி என்றாலும் வேதம் ஓது.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:-

ஆபரேஷன் நடந்திருப்பதால் உட்கார இயலாது; நிற்கத்தான் முடியும். என்ன செய்வது?’ என்று கேட்டால், ‘நின்றபடியே வேதம் சொல்’ என்கிறது சாஸ்திரம். ‘எனக்கு நிற்க இயலாது; உட்காரத்தான் முடியும். அதுவும் சப்பணம் இட்டு உட்கார இயலாது. என்ன செய்வது?’ என்றால், ‘எப்படி முடியுமோ அப்படி உட்கார்ந்து சொல்’ என்றது வேதம். `நிற்கவும் முடியாது, உட்காரவும் இயலாது, படுத்துக்கொண்டுதான் இருக்க வேண்டும்’ எனில், `படுத்துக்கொண்டே வேதம் சொல்’ என்கிறது வேதம் (உததிஷ்டன், உதாஸீன, உதசயான). இந்தச் சலுகை எல்லோருக்கும் பொருந்தாது. ‘வேதம் ஓத வேண்டுமே… ஆனால், முடியவில்லையே’ என ஏங்கும் மனதுக்கு அளித்த வெகுமதி அது. உலகவியல் சுவையை அனுபவிக்க உடல்வலிமையோடு ஓடிக்கொண்டிருக்கும் வாட்டசாட்டமான உடல்வாகு பெற்றவருக்கு இந்தச் சலுகை கிடையாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

–நன்றி பிரம்மஸ்ரீ சேஷாத்திரி நாத சாஸ்திரிகள்.

எப்படி என்றாலும் வேதம் ஓது.
Scroll to top