மருத்துவக் குறிப்பு- தூக்கம், உடல்பயிற்சி முக்கியத்துவம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

மருத்துவக் குறிப்பு:

8 மணிநேரம் தூக்கம் அவசியம் தேவை. அதில் 6 மணி நேரம் ஆழ்ந்த தூக்கமாக இருக்க வேண்டும். அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்னதாக எழுவதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்வது சிறந்தது. இது சிறந்த உடற்பயிற்சி என்பதை கவனத்தில்கொள்ளவும்.

* தினமும் 30 நிமிடங்கள் யோகாசனம் செய்யலாம். அதில் 10 நிமிடங்களாவது, பிராணாயாமம் செய்ய வேண்டும். இது தவிர நடைப்பயிற்சி, உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு கோரும் செயல்களைச் செய்யவேண்டியது அவசியம்.காலையில் தேன் அல்லது எலுமிச்சைச் சாற்றை சுடுநீரில் கலந்து குடிக்க வேண்டும். எலுமிச்சைப் பழத்தை ஜூஸாகவும் குடிக்கலாம். இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்டுகள் உடலில் சேரும் நச்சை நீக்கி, செல்களுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும். அதேபோல சோம்பு-வை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இது செரிமான சக்தியை அதிகரிக்கும்.

* குழைவான, சூடான உணவையோ எண்ணெயில் பொரித்த உணவையோ சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். நன்றாக வேகவைத்த உணவைச் சாப்பிடுவதே சிறந்தது. சரிவிகித உணவாக இருந்தால், இரண்டு வேளை உணவுகூடப் போதுமானது. பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.அன்றாடச் சமையலில் சின்ன வெங்காயம், லவங்கப்பட்டை ஆகியவை இடம்பெற வேண்டும். ஆயுர்வேதம் பதமான மஞ்சள், இஞ்சி, பூண்டு, சீரகம் மற்றும் கறுப்பு மிளகைச் சேர்த்துக்கொள்ள வலியுறுத்துகிறது. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி, நல்ல கொழுப்புகள் அதிகரிக்க உதவும். இவற்றுக்கு உடலின் மெட்டபாலிசத்தை (வளர்சிதை மாற்றம்) சீராக்கும் வல்லமையும் உண்டு.

நன்றி: ஆயுவேத மருத்துவர் ஆர்.பாலமுருகன்.

மருத்துவக் குறிப்பு- தூக்கம், உடல்பயிற்சி முக்கியத்துவம்.
Scroll to top