ஆயில்ய , மூல நட்சத்திரங்கள். ஒரு ஆய்வு.

படித்ததில் பிடித்தது ”
MIH தமிழ்நாடு பிரதிநிதி
திருவான்மியூர் ஸ்ரீமான் இ.பத்மனாதன்

ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது

சாதரணமாக ஒரு தாய் தனது கையால் சமைத்ததை தனது மகனின் திருமணகாலம்வரை போட்டுவருகிறாள்.
அதன்பின்னர் மனைவி சமையல்தான்

ஆயில்யம் நான்கும்/ஆறும் அம்மி போல என்பர்
ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சமையல் கலையில் வல்லவராக இருப்பர்
அதனால் ஆயில்யத்தில் பிறந்த மனைவி வந்தபின் கணவன் மனைவியின் சமையலில் மயஙகிவிடுவதால் தாய்க்கு தன்மகன் மனைவியின் (ச)மையலில் சிக்கி கொள்வானோ என்ற உளவியல் குழப்பம் ஏற்பட்டுவிடும்.
இதற்கு காரணமான மருமகள் மீது ஒருவகையான வெறுப்பு பகையுணர்வு ஏற்படும் .

இதனால் சொல்லப்பட்டதே ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்பது.
ஆக ஆயில்யத்தால் மாமியாருக்கு எந்தவித உயிர்க்கேடும் ஏற்படாது.
இங்கு தேவை மாமியாரின் மனமாற்றமே.

IT Software துறையில் பணிபுரியும் மாப்பிள்ளைகளே நல்ல சாப்பாடு சாப்பிட ஆயில்ய நட்சத்திர பெண்களை திருமணம் செய்து கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.

மேலும் ஆயில்யம் புதனின் நட்சத்திரம் என்பதால் புத்திசாலித்தனமும் கணக்கு போடுவதில் கெட்டிக்காரத்தனமும் உள்ளவர்களாக இருப்பர்.
இந்த இரண்டு குணங்களும் மருமகளிடம் இருப்பது மாமியாருக்கு ஆகாதுதானே!

ஆயில்யத்தின் அதிதேவதை ஆதிசேஷன். இது மறைமுகமாக சொல்வது கணவனை அன்பாலும் உறவிலும் அதிகமாக அணைத்துக் கொள்வதை குறிப்பிடுகிறது
இந்த அன்பு அரவணைப்பில் சிக்கிய மகன் தன்னை மதிப்பானோ என்ற குழப்பம் தாயாகிய மாமியருக்கு ஏற்பட்டு அதனாலும் மாமியாருக்கு ஆயில்யம் ஆகாமல் போய்விடும்.

இப்போது கூட்டுக்குடும்பம் குறைவாகவே உள்ளது
மாமியார் மருமகள் பிரச்சனை அதிகம் வராது.
புத்தியுள்ள ஆண்கள் புத்திசாலித்தனமான ஆயில்ய பெண்களை மணந்து வாழ்வில் வளம் பெறுவார்களாக.

மூலம் மாமனாருக்கு ஆகாது.

மூலநட்சத்திர பெண்ணை திருமணம் செய்துகொள்பவரின் அந்தஸ்து உயரும்.
அந்தகால சமூக அமைப்பில் கூட்டுக்குடும்பத்தில் தந்தையே அனைத்து அதிகாரமும் பெற்றவர்.
மருமகள் வந்தபின் மகனின் அந்தஸ்து உயரும்போது அது தந்தையேயாயினும் அவருக்கு சற்று தாழ்வு மனப்பான்மைஏற்படும். அதன் விளைவாக மகனின் உயர்வுக்கு காரணமான மருமகள்மீது பகை உணர்வு ஏற்படும் இதுவே மூலம் மாமனாருக்கு ஆகாது என்பதன் அடிப்படை.

மூலநட்சத்திர மருமகளால் மாமனாருக்கு உயிர்க்கேடு வரும் என்பதில் உண்மையில்லை.

காலப்புருஷ ராசிக்கு 9வது ராசியில் மூல நட்சத்திரம் உள்ளது. இதன் அதிபதி குரு என்பதால் இதில் பிறந்த பெண்கள் தங்கள் வாழ்க்கையில் நேர்மை ஒழுங்கு ஒழுக்கத்தை உயர்வாக கருதி கடைப்பிடிப்பர்

காலப்புருஷ நட்சத்திரங்களில் 19வது நட்சத்திரமாக ஆதான நட்சத்திரமாக -எல்லாவற்றுக்கும் ஆதார நட்சததிரமாக விளங்குகிறது.இதன் குறியீடாக கட்டப்பட்ட வேர் -ஆணிவேர் சொல்லப்பட்டுள்ளது.ஆதலால் மூல நட்சத்திரபெண்கள் குடும்பத்தின் ஆணிவேராக இருப்பர்.கணவனின் அனைத்துமுயற்சிகளுக்கும் துணைநின்று உதவிகரமாக இராமனுக்கு துணைநின்ற அனுமனைப்போல் காத்து நிற்பர்.அனுமன் மூலநட்சத்திரத்தில் பிறந்தவர் அன்றோ.

மூல நட்சத்திரத்தின் அதிபதி கேது. சோதிடத்தில் இராகு Ultra Violet-புற ஊதாக் கதிர்களின் தன்மையிலும். கேது Infra Red-அகச்சிவப்புக் கதிர்களின் தன்மையிலும் செயல்படுவதாக சொல்லப்படுகிறது.இந்தவகையில் மூலநட்சத்திர பெண்கள் சுயம்பு-சுயசிந்தனையாளர்கள் எனலாம்.தாங்கள் எடுத்த காரியத்தை தீவிரமாக நிறைவேற்ற முயற்சி செய்பவர்கள்.அதேபோல் எதையும் அதே தீவிரத்துடன் உதறித் தள்ளுபவர்கள்.

இந்தக் குணத்தை குறையாகவும் கொள்ளலாம்.நிறையாகவும் கொள்ளலாம்.ஆயினும் முயற்சிகள் நிறைவேற தீவிரம் தேவைதானே.

வாழ்வில் உயரவிரும்பும் அந்தஸ்து அடையவிரும்பும் ஆண்கள் மூலநட்சத்திர பெண்களை மணந்து உயர்வடைய வாழ்த்துக்கள்

தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,(E magazine editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture.Org.
www.modernhinduculture.com
ஆயில்ய , மூல நட்சத்திரங்கள். ஒரு ஆய்வு.
Scroll to top