தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
நண்பர்களே, கடந்த ஒரு வாரமாக ஐயன் ஐயப்பனின் மகிமைகள்,வரலாறுகள் நாலு பதிவில் பார்த்தோம். மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவன MIH பதிவுகளை விரும்பி பார்த்து ,அறியும் பல நண்பர்களை இந்த பதிவுகள் சென்று அடைந்துள்ளமை மகிழ்ச்சியான விடயம்.
இன்று இறுதியான ஐந்தாம் பாகம்-பதிவு இது.
ஐயன் ஐயப்பனிடம் ,அரசன் ராஜசேகரனும் மனைவியும் தம் தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டபின், அதன்பின்னால் ஒரு அம்பினை எய்து அது வீழுமிடத்தில் தனக்கு ஒரு கோயில் எழுப்பும்படி இராஜசேகரனிடம் ஐயப்பன் கட்டளையிட்டான்.
அங்கு தர்மம் தழைக்கவும் ஞானம் பெருகவும் அருள்பொழியும் தவக்கோலத்தில் யோகேச்வரனாகத் தான் எழுந்தருளப்போவதாகவும் திருவாய் மலர்ந்தான்.
அவ்வாறே அம்பு வீழ்ந்த இடமாகிய சபரிமலையில் அற்புதக் கோயில் எழுந்தது. ஆண்டுதோறும் லட்சோப லட்சம் மக்கள் சாதி, மத பேதமின்றி விரதம் அனுசரித்துப் பதினெட்டுப் படியேறி வந்து ஐயனின் தரிசனமும் பேரருளும் பெற்றுச் செல்லும் தலமாகத் திகழ்கிறது.