தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
நண்பர்களே , ஐயப்பனை வேண்டி விரதம் இருக்கம் இந்த காலப் பகுதியில் ஐயப்ப மகிமைகளை தாங்கி இன்று நாலாம் பகுதி இடம்பெறுகிறது.
இன்று மகிஷி சம்ஹார வரலாறு இடம்பெறுகிறது.
ஐயன் மகிஷியோடு போர்புரியலானான். ஒரு கட்டத்தில் அவளை அப்படியே தூக்கி அருகிருந்த அலசா நதி (அழுதா நதி)யில் எறிந்துவிடுகிறான். அவள் எழுவதற்குள் அவள்மீது ஏறி நின்று அற்புத நடனம் ஆடினான்.
மகிஷி சம்ஹாரம் செய்யப்பட்டாள். அவள் சக்தியானது அழகிய பெண்ணாக வடிவெடுத்தது. அவள் ஐயப்பனின் பாதங்களில் பணிந்து தன்னை மணந்து தன்னை ஆட்கொள்ளுமாறு வேண்டினாள்.
ஐயன் , தான் பிரம்மச்சரிய விரதம் பூண்டொழுகுவதால் அவள் கோரிக்கையை மறுத்தான். மேலும் தன்னால் உருப்பெற்ற அவளைத் தன் சகோதரியாக ஏற்று, மஞ்சமாதா, மாளிகைபுறத்தம்மன் என்ற நாமங்களுடன் அவளைப் பக்தர்களுக்கு அருள்புரியும் தேவியாக ஸ்தாபித்தான்.
பின் மகிஷியினால் ஏற்பட்ட துயர் நீங்கப் பெற்ற தேவர்கள் புலிகளாக மாறி ஐயப்ப சுவாமியுடன் பந்தளம் வந்தனர். ஐயனின் மகிமையறிந்த மந்திரியும் மகாராணியும் தங்கள் குற்றங்களுக்கு மன்னிப்புக் கோர, கருணாமூர்த்தி அவர்களை மன்னித்தான்.
நண்பர்களே, ஐயப்ப மகிமைகள் தாங்கிய இந்த பதிவுகள் நாளை ஐந்தாவதும் இறுதியானதாகவும் இடம்பெறும்.