எல்லாக் கிழமைகளிலும் சனீஸ்வரருக்கு தீபம் ஏற்றி வழிபடலாம்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

எல்லாக் கிழமைகளிலும் சனீஸ்வரருக்கு தீபம் ஏற்றி வழிபடலாம். அவரின் பெயரில் ஒரு கிழமை இருப்பதால், அந்தத் தினத்துக்குச் சிறப்பு அதிகம் என நம் மனம் எண்ணுகிறது.

எல்லா நாளும் வழிபட வேண்டியவர் அவர். வெள்ளிக்கிழமைகளில் ஆலயம் செல்வோம். அங்கு நவகிரகங்களை வலம் வரும்போது, சனீஸ்வரரையும் சேர்த்தே வலம் வருவோம்.

போரில் இறங்கிய ஸ்ரீராமன், ஞாயிற்றுக்கிழமையைப் பார்த்து, சூரியனை வழிபடவில்லை. அவசர அவசியத்தை உணர்ந்து வழிபட்டார்; வெற்றி பெற்றார். பிறந்த நாளில் நவக்கிரக ஹோமம் உண்டு. அப்போதும் சனீஸ்வரரை வழிபடுவோம். அந்த தினம் சனிக்கிழமையாக இல்லாமல் இருக்கலாம்.

அதேபோல், நவக்கிரக பிரதிஷ்டை செய்யும் நாளும் சனிக்கிழமையாக இருக்காது. நவகிரகங்களுக்கும் தினமும் அபிஷேகம் உண்டு. அதில் சனீஸ்வரருக்கும் அபிஷேகம் இருக்கும்.

எல்லாக் கிழமைகளிலும் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் இரண்டு கைகளிலும் தண்ணீரை ஏந்தி, சனீஸ்வரரை வழிபடுவார்கள் அந்தணர்கள். ஆக, எல்லாக் கிழமைகளிலும் எள் தீபம் ஏற்றி அவரை வழிபடலாம்.

நன்றி: சேஷாத்திரி நாத சாஸ்திரிகள்.

Image may contain: 1 person
எல்லாக் கிழமைகளிலும் சனீஸ்வரருக்கு தீபம் ஏற்றி வழிபடலாம்
Scroll to top