தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
அம்பாளை வழிபடுவோம்.
நாம் கேட்காவிட்டாலும், அம்பாளை உபாஸித்து விட்டால் அவளே அநேக அநுக்கிரஹங்களைப் பண்ணுகிறாள். முதலாவதாக நல்ல புத்தி உண்டாகிறது. மனஸில் நல்ல எண்ணங்களை உண்டாகின்றன. நல்லதைச் செய்வதற்கான வழி புத்தியிலே பளீரென்று பிரகாசிக்கிறது.
லோக க்ஷேமத்தைச் செய்வதற்கான திரவிய பலமும் தானே கிடைக்கிறது. எல்லோரிடத்திலும் சமமான அன்பு உண்டாகிறது. மனஸில் இந்த அன்பு ஊறாமலே வாய்ப்பேச்சில் இன்று ‘சகோதர சகோதரிகளே’ என்று பிரசங்கம் பண்ணி சமத்துவத்தைப் பற்றி நிறையப் பேசுகிறோம். அம்பாளிடம் பக்தி பண்ணாத வரையில் இது அநுபவத்தில் வராத வாய்ச் சவடால்தான்; புரளிதான். சாக்ஷாத் ஜகன்மாதாவைத் தெரிந்துகொண்டாலே,
‘உண்மையாக அவள் ஒருத்திதான் இத்தனை பேருக்கும் அம்மா; லோகத்தில் உள்ள பசு, பட்சி உட்பட நாம் இத்தனை பேரும் அவள் குழந்தைகள்தான்; அதனால் நாம் எல்லோரும் வாஸ்தவமாகவே சகோதர சகோதரிகள்” என்ற உண்மையான அன்பு உணர்ச்சி உண்டாகிறது. அவளைத் தெரிந்துகொண்டால் அதன்பின் நமக்குள் வெறுப்பு, துவேஷம் வரவே வராது. தப்புக் கண்டுபிடிக்க வராது. தப்பு நடக்கிறபோதுகூட
அதைப் பரிவோடு திருத்துகிற மனப்பான்மை வருமே தவிர, தப்பைத் பிரகடனம் பண்ணிச் சண்டையில் இயங்கத் தோன்றாது. அம்பாளை உபதேசிப்பதால் லோகம் முழுக்க ஒரே குடும்பம் என்ற அன்பு உணர்ச்சி உண்டாகிறது. சந்துரு, சிநேகிதன் என்கிற வித்தியாசமே காமாக்ஷியின் கடாக்ஷம் பெற்றவர்களுக்கு இராது .
நன்றி ”தெய்வத்தின் குரல்”