தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு செயலிலும் இடையூறுகள் ஏதும் வரக்கூடாது என்பதுதான். நம் எல்லோருடைய ப்ராத்தனையாகவும் இருக்க முடியும். இடையூறுகள் இல்லாத தன்மையே “ஸ்வஸ்தி” என்ற வார்த்தையால் குறிக்கிறோம்.
யஜுர் வேதத்தில் வரும் ஒரு ப்ரார்த்தனை….
””ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தச்ரவா;
ஸ்வஸ்தி ந பூஷா விச்வவேதா:
ஸ்வஸ்தி ந ஸ்தாசஷ்யோர் அரிஷ்டநேமி:
ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் ததாத”’
எல்லா வளங்களும் நிறைந்த நல்வாழ்வை அருள வேண்டி இந்திரன், பூஷன்,கருடன், ப்ருஹஸ்பதி முதலான தேவர்களைக் குறித்தும் செய்யும் பிரார்த்தனை இது.
இதில் வரும் ‘ஸ்வஸ்தி’ என்ற வார்த்தை “தடையற்ற நல்வாழ்வு” என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவேதான் இந்த ஸ்வஸ்தியைக் குறிக்கிற சின்னமாக ஸ்வஸ்திகா பயன்படுத்தப்படுகிறது.
பகவான் விஷ்ணுவின் கரத்தில் உள்ள சுதர்சன சக்கரம் ஸ்வஸ்திகா வடிவிலேயே அமைந்துள்ளதாக சிலர் கூறுவர்.
செங்கோன வடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும், ஒன்றுக்கு ஒன்று குறுக்கில் செல்லும் கோடுகள் தாம் ஸ்வஸ்திகா.
இல்லங்களில் முகப்பிலும், பூஜை அறையின் சுவர்களிலும் வரைவது வழக்கம். இதில் உள்ள எட்டு கோடுகளும் எட்டு திக்குகளைக் குறிப்பதாகக் கொள்வர். எட்டு திக்குகளிலுமிருந்து நாம் தொடங்கும் செயலுக்கு எந்த விக்னமும் வரக்கூடாது என்பதே இப்படி வரைவதன் தாத்பர்யம் ஆகும்.