மஹா நைவேத்தியம் என்றால் என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

மஹா நைவேத்தியம் என்றால் என்ன?

மகா நைவேத்தியம் – உப்பு கலக்காமல் இருக்க வேண்டும். அதில் பருப்பைச் சேர்த்தால் அதிலும் உப்பு இருக்கக் கூடாது. உப்பு இருந்தால், அது மகா நைவேத்தியம் என்ற தகுதியை இழந்துவிடும். சர்க்கரைப் பொங்கலில் உப்பு இருக்காது. அது மகா நைவேத்தியம்.

மகா நைவேத்தியம் என உப்பு இல்லாமல் செய்து, பிறகு அதனுடன் உப்புப் பண்டங்களைச் சேர்த்தால், அவற்றுக்கு மகா நைவேத்திய தகுதி கிடையாது. கோயில்களின் அன்றாட பூஜைகளில் உப்பில்லா அன்னமே நிவேதனம் செய்யப்படுகிறது. சுகாதாரத்தைத் திரும்பப் பெற, உப்பில்லா பத்தியம் இருந்து மருந்து உட்கொள்வது உண்டு. ஆண்டவன் ஆராதனையில் ஈடுபடுபவன் உப்பில்லாப் பண்டத்தை ஏற்றுச் செயல்படுவான். விரதங்களை ஏற்பவர், உப்பில்லாப் பண்டத்தை, அதாவது இனிப்பை மட்டும் ஏற்பார்கள்.

பூணூலை ஏற்கத் தயாராகும் சிறுவன், இனிப்பை உண்டு, உப்பைத் தவிர்க்கிறான். குழந்தையின் முதல் உணவூட்டல் நிகழ்வில் (அன்ன ப்ராசனம்) உப்பைத் தவிர்த்து இனிப்பை மட்டும் அளிப்பார்கள். பித்ருக்களுக்கு அளிக்கும் பிண்டத்தில் உப்பு இருக்காது. பத்தாம் நாள் பிரபூதபலி தின்பண்டங்களில் உப்பு இருக்காது.

உப்பு உணவுப் பொருள் அன்று. உணவுக்குச் சுவை கூட்ட சேர்க்கப்படும் பொருள். சமாராதனையில் உணவருந்தும் அந்தணர்கள் முதலில் உப்பில்லா அன்னத்தை உட்கொள்வார்கள். உடல்நலனுக்கு அறுசுவை தேவைப் படுவதால், பிறகு உப்புப் பண்டங்களைச் சேர்த்துக்கொள்வார்கள்.

உடலுக்குள் உறைந்திருக்கும் பிராணனுக்கு உப்பில்லா அன்னம் சேர வேண்டும். பிராணன்தான் கடவுள். அவருக்கு உப்பு தேவை இல்லை. நைவேத்தியத்தின் தூய்மை இழக்காமல் இருக்க உப்பைத் தவிர்க்கலாம். அதன் தரத்தை உயர்த்த சர்க்கரைப் பொங்கலாக மாற்றி உப்பைக் கலக்க முடியாமல் செய்யலாம்.

நன்றி: பிரம்மஸ்ரீ .செஷதிரிநாத சாஸ்திரிகள்.

Image may contain: food
மஹா நைவேத்தியம் என்றால் என்ன?
Scroll to top