ஆலயங்களுக்கு செல்கிறோம். சங்கல்பம் செய்கிறோம்,

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

ஆலயங்களுக்கு செல்கிறோம். சங்கல்பம் செய்கிறோம்,

எந்த ஒரு செயலும் குறிக்கோள் என்ற ஒன்று இல்லாமல் செய்யப்படுவதில்லை. ஏதோ ஒரு குறிக்கோளுடன் தானே சுவாமிக்கு அர்ச்சனை செய்கிறோம். “”பெயர், நட்சத்திரம் சொல்லி உங்களின் குறிக்கோள் நிறைவேற வேண்டி அர்ச்சனை செய்கிறேன்,” என்று அர்ச்சகர் சொல்வதற்கே சங்கல்பம் என்று பெயர். “குறிக்கோள்’ என்ற பொருளைத் தருவதே சங்கல்பம்.

இல்லற வாழ்வில், கணவன் – மனைவி இருவரும் சேர்ந்தே இன்ப-துன்பங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அப்படியிருக்க, இருவரும் சேர்ந்து சங்கல்பம் செய்வதே சிறப்பு.

எதிர்பாராத சூழலில் கணவன் வர இயலாது போனாலோ, தெய்வாதீனமாக அவர் வருவது தடைப்பட்டாலோ அல்லது நோய்வாய்ப்பட்டு வழிபாட்டில் கலந்துகொள்ளமுடியாத நிலை ஏற்பட்டிருந்தாலோ… கணவனுக்கும் சேர்த்து மனைவியானவள் சங்கல்பம் செய்துகொள்ளலாம். உறவைத் துண்டித்துக்கொண்டு தனியே வாழும் நிலையில், சங்கல்பம் செய்யலாம்.

முடிந்தவரையிலும் இருவரும் சேர்ந்தே செயல்பட முயற்சி செய்யுங்கள். அதனால், இறையருளைப் பரிபூரணமாகப் பெற்று மகிழலாம்.

ஆலயங்களுக்கு செல்கிறோம். சங்கல்பம் செய்கிறோம்,
Scroll to top