பங்குனி உத்தர மகிமைகளை தெரிந்து கொள்வோம்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

பங்குனி உத்தர மகிமைகளை தெரிந்து கொள்வோம் நண்பர்களே!

தெய்வங்களின் பிறந்த நாள், திருமணநாள் என பங்குனி உத்திரம் நாள் மகிழ்ச்சியை ஊட்டக்கூடியது. இந்த நாளில் தான் சிவ விஷ்ணுவின் புதல்வராகக் தர்மசாஸ்தா அவதரித்தார். சாஸ்தாவின் அவதார தினமான பங்குனி உத்திரநாளில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் விசேஷ பூஜை உண்டு.

இந்நாளில் தான் லட்சுமிதாயார் பார்க்கவ மகரிஷியின் மகளாக பூமியில் பார்கவி என்னும் பெயரில் அவரித்தரித்தாள். கைலாயத்தில் சிவபார்வதி திருமணம் பங்குனி உத்திர நாளில் தான் நடந்தது. இந்த திருமணக் கோவலத்தைத் தான் சித்திரை விசுவன்று பொதிகையில் அகத்தியருக்கு தரிசனமாக்கினர்.

ராமன் சீதாதேவியையும், லட்சுமணன் ஊர்மிளாவையும், பரதன் மாண்டவியையும், சத்ருக்கனன் சுருதகீர்த்தியையும் கைப்பிடித்த நாளும் இது தான். முருகப்பெருமான் தெய்வானையை மணம் செய்த நாளும் இதுவே.

முருகப்பெருமான் பங்குனி உத்திரத்தில் திருமணம் செய்தவர் என்பதால், திருமணத்திற்கு காத்திருக்கும் பெண்கள், ஜாதக ரீதியாக செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், காரணமின்றி திருமணம் தடைபடுபவர்கள், முத்துக்குமாரசுவாமியை (முருகன்) வணங்கிவர நிச்சயமாக உரிய பலன்கள் கிடைக்கும்.

வழிபடுவோம். பலன் அடைவோம்.

No photo description available.
பங்குனி உத்தர மகிமைகளை தெரிந்து கொள்வோம்
Scroll to top