”’தஶபுத்ரஸமா கன்யா தஶபுத்ரான்ப்ரவர்த்தயன்|

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

பெண் குழந்தைகள்:

நண்பர்களே இன்றும் நம்மவர்கள் மத்தியில் பெண் குழந்தைகள் பிறந்தால் மனம் சுழிப்பவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதே சமயம் குழந்தைகள் இல்லாமல் கவலைப் படுபவர்களும் பலர் உண்டு.

அண்மையில் வெளியான சைவ சமய இலக்கிய இதழான ” சனாதனி” பத்திரிகையில் வெளிவந்த ஓர் விடயத்தை இங்கு பகிர்கிறோம்.

”’தஶபுத்ரஸமா கன்யா தஶபுத்ரான்ப்ரவர்த்தயன்||
யத்பலம்லபேத மர்த்யஸ்தல்லப்யம்கன்னயைகயா”’

அதாவது பெண்குழந்தை பெற்றால் மனம் சலிப்பவர்களுக்கும் ஆண் குழந்தை என்றால் புண்ணியம் என்று எண்ணுபவர்களுக்கும் இந்த ”ஸ்காந்த புராணம்” சொல்லும் ஸ்லோகம் சமர்ப்பணம்!

இந்த புராணம் என்ன சொல்கிறது? பத்து ஆண்குழந்தைகளை வளர்த்தால் என்ன அனுகூலங்கள் கிடைகின்றனவோ அதுபோல பத்து மடங்கு கிடைக்கிறது ஒரு பெண் குழந்தையை வளர்க்கும் போது!!!

எந்தக் குழந்தை என்றாலும் அன்பாக இருப்போம் .

தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,(E magazine editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture.Org.
www.modernhinduculture.com
”’தஶபுத்ரஸமா கன்யா தஶபுத்ரான்ப்ரவர்த்தயன்|
Scroll to top