”‘மணி, மந்திரம், ஔஷதம்’

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
அண்மையில் தமிழகத்தில் எடுக்கப் பட்ட ஆய்வுகள் சில ஹெர்பல் வைத்திய முறைகள் பலருக்கு நல்ல பலன்களை தருவதாக தெரிவிகின்றன, வேறு சில ஆய்வுகள் ஆங்கில மருந்துகளின் விற்பனை சற்று வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிகின்றன.

”‘மணி, மந்திரம், ஔஷதம்’ என்று அருளியுள்ளார் கள் நம் பெரியவர்கள். துளசி மாலை, ருத்ராட்சம், ஸ்படிகம், குளிகைகள் போன்றவை மணிகள். இவை தீய அதிர்வுகளை, கிருமிகளைத் தடுக்கும். `மந்திரம்’ என்றால் `உச்சரிப்பதால் காப்பாற்றுவது’ என்று பொருள். `ஔஷதம்’ என்றால் மூலிகைகள், ரசவாதங்கள் கொண்ட மருத்துவ முறை.

இந்த மூன்று வழிகளும் நோய்களைக் குணமாக் கும் பொருட்டு நம் முன்னோர் அருளிய வழி முறைகள் ஆகும். தீமைகளை மணி தடுத்துவிடும், அப்படியும் சிரமம் என்றால் மந்திரங்கள் உதவும். அப்போதும் முடியாதபட்சத்தில் ஔஷத சிகிச்சை குணமாக்கும். தெய்வங்களைப் போற்றும் திருப் பதிகங்களும், பாசுரங்களும்கூட மந்திரங்கள்தான். நம்புபவர்களுக்கு அவை பலனளிப்பவை; நம்பாதவர்கள், தங்களுக்கான வழிகளில் பயன் பெறலாம் தவறில்லை.

ஒலி அலைகள் குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. எண்ணற்ற அந்நிய ஆக்கிரமிப்பு களால் நாம் தொலைத்துவிட்ட பொக்கிஷங்கள் மீட்கப்படும் நிலை வந்தால், நம் முன்னோர் அருளிய மருத்துவமுறையின் சிறப்பை அறியும் வாய்ப்பும் கைகூடும்.

நன்றி: குறிப்புகள் உதவி, ஷண்முக சிவாச்சாரியார்.

”‘மணி, மந்திரம், ஔஷதம்’
Scroll to top