மருத்துவக் குறிப்பு: கரணைக்கிழங்கு:

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

இன்றைய மருத்துவக் குறிப்பு:

கரணைக்கிழங்கு:

உணவு வகைகளில் தாவரங்களிலிருந்து கிடைக்கும் காய், கனிகள் போன்று கிழங்குகளும் ஒரு உணவாக இருக்கிறது. பூமிக்கு அடியில் விளைவதால் இவை இன்னும் அதிக உயிர்ச்சத்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நமது நாட்டில் பரவலாக அதிகம் உண்ணப்படும் கிழங்கு வகையான கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கரணைக்கிழங்கு:

மனிதன் உண்ணும் உஎலும்புகள் நமது உடலுக்கு அடிப்படையாக இருப்பது நமது எலும்புகள் ஆகும். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியம். கருணை கிழங்கு எலும்புகளை வலிமையாக்கும் சத்து கொண்டதாக இருக்கிறது. எலும்புகள் வலு குறைவாக இருக்கும் குழந்தைகள், வயதானவர்கள் கருணை கிழங்கை வாரம் ஒரு முறை சாப்பிடுவதால் எலும்புகள் வலிமை பெறும்.

மூலம் நோய் ஏற்பட்டவர்களுக்கு சிறந்த இயற்கை மருத்துவ உணவாக கருணை கிழங்கு இருக்கிறது. மலச்சிக்கல், குடலில் புண்கள் போன்றவை ஏற்பட்டவர்கள் தினமும் ஒரு வேளை கருணை கிழங்கு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் மூலம் காரணமாக குடலில் ஆசனவாயில் ஏற்பட்டிருக்கும் புண்களை விரைவில் ஆற்றுகிறது. நெடுநாள் மலச்சிக்கல் பிரச்சனையையும் போக்குகிறது.

உடல் எடை குறைய அதீத உடல் எடை கூடுவது உடல் நலத்திற்கு பல பாதிப்புகளை உண்டாக்கும். உடல் எடை குறைய சரியான ஆரோக்கியமான உணவு உண்ணும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். கருணை கிழங்கு உடல் எடை குறைக்க சிறப்பாக உதவுகிறது. தினம் அல்லது வாரத்திற்கு இரண்டு முறையாவது கருணை கிழங்கை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை வெகு சீக்கிரத்தில் குறைவதை காணலாம்.

prepared by: panchadcharan swaminathasarma.

Image may contain: food
மருத்துவக் குறிப்பு: கரணைக்கிழங்கு:
Scroll to top