ஆலயத்தில் புனிதம் காப்போம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

அன்பர்களே, ஆலயத்துக்கு செல்கிறோம். சிலரை பார்த்திருக்கிறோம், ஆலயத்தில் உள்ள விக்கிரகங்களை தொட்டு வணங்குவதை அவதானித்து இருக்கிறோம்.

இது சரியா பிழையா என்று பலர் எண்ணியும் உள்ளார்கள்.

ஆன்மிக வல்லுநர் ஷண்முக சிவாச்சாரியார் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்:

கோயில்களில் வழிபாடு செய்யும்போது சுவாமி சிலைகளைத் தொட்டு வணங்கலாமா என்றால், நிச்சயம் தொடாமல் வணங்குவதுதான் நல்லது. ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’என்றார் ஔவைப் பிராட்டியார்.

அப்படி ஆலயம் தொழச் செல்வதற்கென்று பல விதிமுறைகள் இருக்கின்றன. ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோயில்களில் நிச்சயம் சுவாமி சிலைகளைத் தொடக்கூடாது. நாம் மாணவர்களாக இருந்தபோது, பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் அறிவியல் ஆய்வுக்கூடங்களுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொள்வோம். அப்போது, சோதனைச்சாலைகளில் உள்ள பொருட்களை ஆசிரியரின் அனுமதி பெற்று, அவற்றைத் தொடுவோம். சோதனைகளை மேற்கொள்வோம்.

ஆனால், அதுவே நாம் நாசாவிலுள்ள பொருட்களை பார்வையாளர்களாகச் செல்லும்போது தொடமுடியுமா? தொடக்கூடாது. ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோயில்களில் அதற்குரிய புனிதம் காக்கப்படவேண்டும்.

prepared by ;panchadcharan swaminathasarma.

No photo description available.
ஆலயத்தில் புனிதம் காப்போம்.
Scroll to top