கட்டுரை

சிவன் உங்களுக்குத் துணை நிற்பான்

அறிந்து கொள்ளுங்கள் நண்பர்களே:; சிவாய நம:’ என்று சிந்தித்து இருப்பவர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை என்பதை மனதில் கொண்டு, நீங்கள் , தினமும் எம்பெருமானை வழிபடுங்கள். மனமுருகி வழிபடுங்கள் , கோவிலுக்கு போக முடியவில்லையா, உங்கள் வீட்டு சாமி படத்திற்கு முன்னால் நின்று வழிபடுங்கள். தேவாரங்கள் படியுங்கள். படிக்க முடியவில்லையா, யாரும் படித்தால் அமைதியாக கேளுங்கள். நாளைக்கு ஒருவன் வருவான் – அவன் பெயர் காலன்; ஆலகாலன், அந்த ஆலகாலன் வருகிற போது நீங்கள் தேடிக்கொண்டிருக்கிற […]

கடவுள் என்பது நீங்களும் தான்

அறிந்து கொள்வோம் நண்பர்களே!; கடவுள் என்பது நீங்களும் தான், நானும் தான். Ego- வை விடுவதுதான் ஆன்மீகம். நான் ஏதோ பெரிய இடத்தில் இருக்கிற ஆள். நீ என்கிட்ட பிரசாதம் வாங்கினால் தான் உருப்படுவாய் என்று சொல்வது அல்ல ஆன்மீகம். இந்த உலகத்தில் எல்லாரிடத்திலும் ஆண்டவன் இருக்கிறான். ””அஹம் பிரம்மாஸ்மி, தத்வமஸி”’ என்பதைப் புரிந்து கொள்வது தான் ஆன்மீகம். so, யார் ஒருவன் தன்னிடம் இருக்கிற அந்த இறையாற்றலை உணர்ந்து கொள்கிறானோ – இப்போ நாம் சுவிட்ச் […]

எல்லாம் வல்ல இறைவனை சரண் அடையுங்கள்.

நண்பர்களே அறிந்து கொள்ளுங்கள் :; எல்லாம் வல்ல இறைவனை சரண் அடையுங்கள். எனக்குள்ளதெல்லாம் உனதென்றே அளித்து விட்டேன். இனி நடுக்கடலில் மூழ்கிடினும் எனைக் கரையேற்றுதல் நின்திருவுளமே” என்ற நிலையில் ஒரு உண்மையான பக்தனாக இருந்து, இறைவன் எங்கும் பரவியிருக்கிறான் என்று தைரியமாக இறைவனை நம்பிவிட வேண்டும். இறைவன் எது செய்தாலும் அது உங்கள் நன்மைக்காகத்தான் என்று தெரிந்து கொள்கிற பக்குவம் உங்களுக்கு வர வேண்டும். அப்போது தான் இறைவன் உங்களிடம் வருவான். உங்களுக்கு செய்வதற்கு முன்பு உங்களை […]

அறுசுவையில் இனிப்பு!

அறிந்து கொள்வோம் நண்பர்களே:; அறுசுவையில் எல்லோராலும் விரும்பப்படுவது இனிப்பு என்கிறது சாஸ்திரம் (ஸர்வப்ராணி மனோகரம்). உப்பு என்பது சுவை ஏற்றுவதற்குப் பயன்படுவது. இதை, சுவையின் முதல்வன் என்று சாஸ்திரம் கூறும் (ரஸானாம் அக்ரஜம்…). மாறுபட்ட கோணத்தில் இரண்டுக்குமே சிறப்பு உண்டு. ஒன்றுக்கு துயரம், மற்றொன்றுக்கு மகிழ்ச்சி என்று வரையறுப்பது நமது தனிப்பட்ட எண்ணமே! அவை இரண்டும் துயரத்தையோ மகிழ்ச்சியையோ குறிப்பதில்லை. இனிப்போ, உப்போ… இரண்டுமே அளவுக்கு அதிகமாக உடம்பில் தென்பட்டால், உடல் உபாதையைத் தோற்றுவிக்கும் என்கிறது ஆயுர்வேதம்.எப்படி […]

கடவுள் எங்கும் பரந்து இருக்கிறார்

அறிந்து கொள்வோம் நண்பர்களே! கடவுள் எங்கும் பரந்து இருக்கிறார் என்பது எல்லாச் சமயத்தவரின் கொள்கை. உருவம் இல்லாமல் பரந்து இருக்கிற கடவுளைச் சைவரும் வைணவரும் தமது கடவுள் திருவுருவத்தில் மறைபொருளாக அமைத்துக் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் கடவுள் உருவங்களுக்கு நான்கு கைகள் அல்லது எட்டுக் கைகளை அமைத்துக் காட்டியிருக்கிறார்கள். திசைகளை நான்காகவும் எட்டாகவும் கூறுவது மரபு. ஆகையினாலே, எல்லாத் திசைகளிலும் பரந்து இருக்கிறவர் கடவுள் என்பதைக் காட்ட, நான்கு கைகளை அல்லது எட்டுக் கைகளைக் கற்பித்திருக்கிறார்கள்.

நாத்திக வாதம் ஒரு மாய மான்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:; நாத்திக வாதம் ஒரு மாய மான். கற்பனை மிக்க சொற்பொழிவுகளிலேயே அது உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது. இப்போது யாரும் சொல்லாமல் தானாகவே செத்துவிட்டது. நான் நாத்திகனாக இருந்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன். எவ்வளவு போலித்தனமான புரட்டு வேலைகளுக்கு நம்மை ஒப்புக் கொடுத்திருந்தோம் என்பதை எண்ணிப் பார்க்கும்போதே, எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது.  கடவுள் இல்லை என்று மறுப்பவன் கால காலங்களுக்கு உயிரோடிருப்பானானால், `இல்லை’ என்ற எண்ணத்தையே நான் இன்றும் கொண்டிருப்பேன். அவரவரும் பெற வேண்டிய […]

கோபம் வேண்டாம்.

அருளா! நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்; அணுத்துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும்’ என்கிறார் வள்ளலார். உலகிலேயே மிக மிகச் சிறியது அணு. அந்த அளவுக்குக்கூட தனக்குக் கோபம் வரக்கூடாது என்கிறார் வள்ளலார். அதனால்தான் அவரை `மகான்’ எனக் கொண்டாடுகிறோம். `கோபம் தவிர்’ என்பது வெற்றுச்சொல் அல்ல; மனத்தில் இருத்திக்கொள்ளவேண்டிய தத்துவம். மனிதனால் கட்டுப்படுத்த முடியாதது எதுவும் இல்லை. கோபமும் அப்படித்தான். கட்டுப்படுத்துவோம்… அன்புக்குக் கட்டுப்படுவோம்!

சிவலிங்கம்–சொல்லும் தத்துவம் என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:; சிவம்’ என்றால் மங்கலம். ‘லிங்கம்’ என்றால் அடையாளம். மங்கல வடிவம் அது. மங்கலம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையைச் சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. ‘நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும்’ என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தேஸ்மைகாமா:).சிவத்தின் இணைப்பால், உமா தேவிக்கு ‘ஸர்வமங்கலா’ என்ற பெயர் கிடைத்தது.கிடைத்த […]

அர்ச்சனையின் பெருமை..

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:; அர்ச்சனையின் பெருமை.. இறைவனை வழிபட்டு அருளைபெற பக்திதான் சிறந்தது. பக்தியே பக்தியை வளர்க்கும். இதற்கு ஒன்பது வகை சாதனங்கள் உள்ளன. அவை என்னவெனில் சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாதஸேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதனம். இவை முறையே ஆணடவனின் பெருமையைக் காதால் கேட்பது, பாடிப் பரவசமடைவது, தியானித்து {நினைத்து} இருப்பது, திருத்தொண்டு செய்வது, அர்ச்சனை {பூஜை} செய்வது, தண்டனிட்டு வணங்குவது, ஆண்டவனுக்கு அடியவன் நான் என்ற தீர்மானத்துடன் அவன் பணியே செய்து […]

ஏன் தூபம் இடுகிறோம்? அதன் சிறப்பு என்ன? தெரிந்து கொள்வோம்.:;

நண்பர்களே, அறிந்து கொள்வோம்: ஏன் தூபம் இடுகிறோம்? அதன் சிறப்பு என்ன? தெரிந்து கொள்வோம்.:; தூபத்துக்குச் சாம்பிராணியும் பயன்படுத் தலாம் குங்குலியமும் பயன்படுத்தலாம். ‘அக்னி தேவனுக்கு மூன்று அண்ணன்மார் இருந்தார்கள். அவர்கள், வேள்வியில் இடப்படும் உணவை அந்தந்த தேவர்களுக்கு அளிக்கும் பொறுப்பை ஏற்று சேவை செய்தார்கள். காலப்போக்கில், உயிர்வாழத் தேவைப்படும் உணவுத் தட்டுப்பாட்டால் உயிரிழந்தார்கள். பிறகு அவர்கள் ‘பூதத்ரு’ எனும் மரமாக உருவெடுத்தார்கள். அந்த மரத்திலிருந்து கிடைக்கும் கொழுப்புப் பொருள் குங்கிலியம். இறந்துபோன சகோதரர்களின் மாமிசம் குங்குலிய […]

Scroll to top