அர்ச்சனையின் பெருமை..

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:;

அர்ச்சனையின் பெருமை..

இறைவனை வழிபட்டு அருளைபெற பக்திதான் சிறந்தது. பக்தியே பக்தியை வளர்க்கும். இதற்கு ஒன்பது வகை சாதனங்கள் உள்ளன. அவை என்னவெனில் சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாதஸேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதனம். இவை முறையே ஆணடவனின் பெருமையைக் காதால் கேட்பது, பாடிப் பரவசமடைவது, தியானித்து {நினைத்து} இருப்பது, திருத்தொண்டு செய்வது, அர்ச்சனை {பூஜை} செய்வது, தண்டனிட்டு வணங்குவது, ஆண்டவனுக்கு அடியவன் நான் என்ற தீர்மானத்துடன் அவன் பணியே செய்து வருவது, நட்புணர்வோடு ஒன்றி வழிபடுவது, தன்னையே பகவானுக்கு அர்ப்பனிப்பது, இந்த ஒன்பது வகை சாதனங்களில் ஏதாவது ஒன்றின் மூலம் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் எல்லாம் பகவானுக்கே அர்ப்பணம் என்ற திட நம்பிக்கையோடு பக்தி புரிவதுதான் உத்தமமான உபாசனை ஆகும்.

இவைகளில் அர்ச்சனைக்குத் தனிச்சிறப்பு உண்டு. பகவானுடைய மூர்த்தியை நமக்கு ஏற்றவகையில் அமைத்துக்கொண்டு பக்தி பரவசத்துடன் அர்ச்சிக்க வேண்டும். ஆலயத்திலும், இல்லத்திலும், அர்ச்சா மூர்த்தியை பூஜிக்கலாம். அபிஷேகம், அலங்காரம், நைவேத்தியம், தூப-தீப ஆராதனை என்று பலவகை உபசாரங்கள் {பணிவிடைகள்} அர்ச்சனைக்கு உட்பட்டவை.
–நன்றி- பக்தி ஆன்மிக மலர்

அர்ச்சனையின் பெருமை..
Scroll to top