கோபம் வேண்டாம்.

அருளா! நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்; அணுத்துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும்’ என்கிறார் வள்ளலார். உலகிலேயே மிக மிகச் சிறியது அணு. அந்த அளவுக்குக்கூட தனக்குக் கோபம் வரக்கூடாது என்கிறார் வள்ளலார். அதனால்தான் அவரை `மகான்’ எனக் கொண்டாடுகிறோம். `கோபம் தவிர்’ என்பது வெற்றுச்சொல் அல்ல; மனத்தில் இருத்திக்கொள்ளவேண்டிய தத்துவம். மனிதனால் கட்டுப்படுத்த முடியாதது எதுவும் இல்லை. கோபமும் அப்படித்தான். கட்டுப்படுத்துவோம்… அன்புக்குக் கட்டுப்படுவோம்!

கோபம் வேண்டாம்.
Scroll to top