ஆலயத்தில் விக்கிரகங்களை தொடுவதை தவிர்ப்போமே!
நண்பர்களே, தவறுகளை அறிந்து கொள்வோம். ஆலயங்களில் விக்ரகங்களை தொடுவதை தவிர்ப்போம். பிரதோஷ நேரங்களில் நந்தியின் காதில் நம்முடைய கோரிக்கைகளை சொல்வது மிகவும் தவறானது. ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளைத் தொடுதல் என்பது முற்றிலும் தவறான ஒன்று. அஷ்டபந்தனம் சாற்றப்பட்டுள்ள சிலைகளை அர்ச்சகரைத் தவிர மற்ற எவரும் தொடக்கூடாது. சிவாலயத்திற்குள் நுழைவதற்கு முன்னால் நந்திக்குப் பின்னால் நின்று கொம்புகள் வழியாக இறைவனை தரிசிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து நந்திக்கு முன்னால் பக்கவாட்டில் வந்து நின்று உள்ளே செல்வதற்கு அனுமதி […]