கட்டுரை

நமசிவாய!–ஐந்துக்கு இரண்டு பழுதில்லை!

தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே: ஐந்துக்கு இரண்டு பழுதில்லை! நமசிவாய’ என்பது, ஸ்தூல பஞ்சாட்சரம். ‘சிவாய நம’ என்பது சூட்சும பஞ்சாட்சரம். ‘ஸ்தூல’ என்றால் கண்ணால் காணக் கூடியது; ‘சூட்சுமம்’ என்றால் காண முடியாதது. அதாவது, ‘நமசிவாய’ என்று உச்சரித்து வழிபட்டால், ஈசன் நம் கண்களுக்குப் புலப்படுவார். ‘சிவாய நம’ என்று சொல்லி தியானித்தால், நம் மனதில் உறைவார்! நமசிவாய எனும் மந்திரத்தில் உள்ள ‘ந’ எனும் அட்சரம்- சத்ய ஜோதி வடிவானது. ‘ம’- விஷ்ணு ரூபமானது. ‘சி’- […]

நவராத்திரி கொலு படி தத்துவம்*

நன்றி: சோமாஸ் சர்மா (கேளரீசன்) நவராத்திரி கொலு படி தத்துவம்* நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். மனிதன் படிப்படியாக உயர்த்திக் கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். *முதலாவதுபடி* ஓரறிவு உயிர்ப் பொருட்களான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் […]

இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான்

நண்பர்களே, அறிவோம் தெளிவோம்: “இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். ஆதலால் நாம் இருக்கும் இடத்திலேயே வணங்கினால் போதாதா? ஆலயத்துக்குச் சென்றுதான் வணங்கவேண்டுமா?” என்று வினவுபவர் பலருண்டு. பசுவின் உடம்பு முழுவதும் பால் நிறைந்நிருக்கின்றது. பாலைப் பெற முயலுகின்ற ஒருவன் அதன் கொம்பையோ, காதுகளையோ, வாலையோ வருடினால் பால் கிடைக்குமா? எனவே, பால் பெற விரும்புபவன் பசுவின் மடியை வருடிப் பால் பெறுவது போல, இறைவனின் அருளைப்பெற விரும்;புவோன் ஆலயத்திற்குச் சென்று இறைவன் திருமுன் நின்று வழிபட்டு திருவருளைப் பெறவேண்டும். […]

மூல நட்சத்திரம் மாமனார் – மாமியாருக்கு ஆகாது என்பது மூடத் தனமானது!

தெரிந்து கொள்வோம் , தெளிவடைவோம் நண்பர்களே: மூல நட்சத்திரம் மாமனார் – மாமியாருக்கு ஆகாது, பூராடம் என்றால் கழுத்தில் தாலி ஆடாது… இப்படி என்னென்னவோ ஜோதிட நம்பிக்கைகள் பெண்களின் திருமணத்துக்குத் தடையாக நிற்கின்றன. உள்ளபடி இதெல்லாம் உண்மைதானா? இந்த நம்பிக்கைகளுக்கு ஜோதிட ஆதாரங்கள் உண்டா? ‘இல்லை’ என்பதே அழுத்தமான பதில். விளக்கங்களுடன் பார்ப்போம்.ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்’, ‘பெண் மூலம் மாமனாருக்கு ஆகாது’ – ஆதாரம் இல்லாத இந்த சொல்வழக்குகள் மக்களிடம் ஆழமாகப் பதிந்துவிட்டன. இன்றும், […]

தகவல்: செஷாதிரிநாத சாஸ்திரிகள். பூராடம் நட்சத்திரத்தைப் ‘பூர்வாஷாடம்’ என்கிறது வேதம். ‘

தகவல்: செஷாதிரிநாத சாஸ்திரிகள். பூராடம் நட்சத்திரத்தைப் ‘பூர்வாஷாடம்’ என்கிறது வேதம். ‘பூராடத்தின் கழுத்தில் நூலாடாது’ என்றொரு சொல்வழக்கு உண்டு. இதற்கு, ‘கழுத்தில் இருக்கும் தாலி நூல் ஆடாது, அறுந்துவிடும்’ எனும் விளக்கம் கொள்ளப்படுகிறது. ஆனால்… ‘ஆடாமல் – அசையாமல் நிலைத்து இருக்கும்’ என்ற பொருளில் வந்தது அந்த வழக்கு. நட்சத்திரம் ஒருவரை விதவை ஆக்காது. பெண் ஒருத்தி விதவை ஆவதற்குக் காரணம், கணவனது ஆயுளின் குறைவே ஆகும். அதை பூராடம் நிர்ணயிக்காது. கணவனின் ஜாதகமே அவனது ஆயுளை இறுதி […]

எண்ணங்களே வாழ்க்கையை அமைக்கின்றன.

நண்பர்களே, தெரிந்து கொள்வோம்: எண்ணங்களே வாழ்க்கையை அமைக்கின்றன. ஒவ்வொரு மனிதனின் எண்ணங்களே அவனது வாழ்க்கைக்கு காரணமாய் அமைகிறது. நல்ல எண்ணங்கள், நல்ல சிந்தனைகள், நல்ல சூழ்நிலையை உருவாக்குகின்றன. தீய எண்ணங்கள், தீய சிந்தனைகள், தீய சூழ்நிலையை உருவாக்குகின்றன. இந்த பிரபஞ்சம் முழுவதுமே என்ன அலைகளால் சூழப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்கையும், சுற்றுப்புறமும், செயல்பாடுகளும் இந்த எண்ண அலைகலாலேயே வழிநடத்தப்படுகிறது. நல்ல சிந்தனையை விதைக்கும் மனிதன் நல்ல எண்ண அலைகளால் ஈர்க்கப்படுகிறான். அதே எண்ண அலைகள் கொண்ட மற்றவர்களும் […]

வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு பெருமை ஹிந்து மதக் கடவுளுக்கு உண்டு…

வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு பெருமை ஹிந்து மதக் கடவுளுக்கு உண்டு…ஏன்னா கடவுளை எல்லா விதமாகவும் வழிபடும் தன்மை ஹிந்து மதத்தில் மட்டும் தான் 1. தாயாக = அம்மன் 2. தந்தையாக = சிவன் 3. நண்பனாக = பிள்ளையார், கிருஷ்ணன் 4. குருவாக = தட்சிணாமூர்த்தி 5. படிப்பாக = சரஸ்வதி 6. செல்வமகளாக = லக்ஷ்மி 7. செல்வமகனாக = குபேரன் 8. மழையாக = வருணன் 9. நெருப்பாக = […]

இதில் உள்ள மந்திரத்தை சொல்லி தேவியை வழிபடுங்கள்!

இன்றைய சிந்தனை: “எந்த தேவியானவள் எல்லா தேவதைகளிடத்திலும் சக்தி ரூபமாக விளங்குகிறாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்’ என்று தேவி மாகாத்மியத் தில் சொல்லப்பட்ட கீழுள்ள சுலோகத்தை ஜெபிப்போம். யாதேவீ ஸர்வ பூதேஷீ சக்திரூபணே ஸம்ஸ்த்திதா/ நமஸ்தஸ்ய நமஸ்தஸ்ய நமஸ்தஸ்ய நமோ நம//

ஈச்வரனைக் காட்டிலும் குரு பெரியவர் எப்படி?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஈச்வரனைக் காட்டிலும் குரு பெரியவர். ஈசுவர பக்தியைக் காட்டிலும் குருபக்தி விசேஷம் என்கிறார்களே ஏன்?’ என்று கேட்டால், ஈசுவரனை யாரும் பார்க்கவில்லை. பிரத்தியக்ஷமாக நாம் பார்க்கக்கூடிய ஒரு மனிதர் எப்போதும் சுத்தமாய், ஞானம் உடையவராய், அசைவு இல்லாத சித்தம் உடையவராய், அப்பழுக்கு இல்லாமல் நமக்குக் கிடைத்துவிட்டால் நாம் எந்த மனச்சாந்திக்காக ஈசுவரனிடத்தில் போகிறோமோ அந்த சாந்தி இவரிடம் பக்தி செலுத்தினாலே கிடைத்து விடுகிறது. அதனால் தான், குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ […]

இறைவனை வெவ்வேறு உருவங்களில் தரிசிக்க காரணம் என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இறைவனை வெவ்வேறு உருவங்களில் தரிசிக்க காரணம் என்ன? ஆம் .இறைவன் ஒருவரே தான். அவர் வடிவம் முதலியவற்றிற்கு அப்பாற்பட்ட வராயினும், சத்தியினாலே பல்வேறு தொழில்களைச் செய்வதால் அவர் செய்யும் திருத்தொழில்களைப் பொறுத்து வெவ்வேறு பெயர் கொண்டு வெவ்வேறு உருவங்களில் வழிபடுகின்றோம். இதனை வாரியார் சுவாமிகள் மிக அழகாக தங்கம் ஒன்று தானென்றாலும் அது வெவ்வேறு வடிவங்களில் அணிகலன்களாகச் செய்யப்படும் பொழுது வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றதென்று கூறி விளங்கவைப்பார். கோவிலினுள்ளே எத்தனை பரிவார மூர்த்திகள் […]

Scroll to top