நமசிவாய!–ஐந்துக்கு இரண்டு பழுதில்லை!

தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே:

ஐந்துக்கு இரண்டு பழுதில்லை!

நமசிவாய’ என்பது, ஸ்தூல பஞ்சாட்சரம். ‘சிவாய நம’ என்பது சூட்சும பஞ்சாட்சரம். ‘ஸ்தூல’ என்றால் கண்ணால் காணக் கூடியது; ‘சூட்சுமம்’ என்றால் காண முடியாதது. அதாவது, ‘நமசிவாய’ என்று உச்சரித்து வழிபட்டால், ஈசன் நம் கண்களுக்குப் புலப்படுவார். ‘சிவாய நம’ என்று சொல்லி தியானித்தால், நம் மனதில் உறைவார்!

நமசிவாய எனும் மந்திரத்தில் உள்ள ‘ந’ எனும் அட்சரம்- சத்ய ஜோதி வடிவானது. ‘ம’- விஷ்ணு ரூபமானது. ‘சி’- தேயு மற்றும் ருத்திர சொரூபமானது. ‘வ’- வாயு வடிவம். அதாவது மகேஸ்வர ரூபமானது. ‘ய’- ஆகாய வடிவானது; சிவ ரூபமானது.

இவற்றில், ‘ந’ வுக்குள் ‘ம’ அடங்கும். ‘நம’வுக்குள் ‘வ’ அடங்கும். ‘நமவ’க்குள் ‘ய’ அடங்கும். ‘நமவய’ என்பதில் ‘சி’ அடங்கும். இந்த அட்சரங்கள் முறையே நமசிவய, நமவசிய, வசியநம, சிவயநம, மநயவசி மற்றும் சிவயவசி என்று மாறுபட்டும் வழங்கப் பெறும்.

‘ஐந்துக்கு இரண்டு பழுதில்லை!’ என்பார் வாரியார் ஸ்வாமிகள். அதாவது, ‘இந்தக் கலியுகத்தில் ‘நமசிவாய’ என்று உச்சரிக்காவிட்டாலும் பரவாயில்லை; ‘சிவா’ என்ற இரண்டு எழுத்துகளையாவது உச்சரியுங்கள்… பாவம் நீங்கும்!’ என்கிறார் அவர்.
–ஆன்மிக இதழ் ஒன்றில் இருந்து.( தகவல் சேகரிப்பு: பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா)

Image may contain: 1 person, closeup
நமசிவாய!–ஐந்துக்கு இரண்டு பழுதில்லை!
Scroll to top