கட்டுரை

தீர்த்த உத்சவம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தீர்த்த உத்சவம்! ஆலயங்களில் நடைபெறும் மகோத்ஸவ இறுதியில் தீர்த்த உத்சவம் நடைபெறுவதை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள்.,தரிசித்து இருப்பீர்கள். இது மிக மிக அவசியமான உத்சவம். பெருந் திருவிழாக்கள் யாவும் நீரோடு தொடர்புடையவையாகும். இவை கலசங்களில் புனிதநீரைச் சேகரித்து எடுத்துவரும் தீர்த்த சங்கிரமணம் எனும் நிகழ்வுடன் தொடங்கித் தீர்த்தவாரி எனப்படும் சடங்குடன் முடிவடைகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வு இறுதிநாளில் நடைபெறும் தீர்த்தவாரியே ஆகும். தீர்த்தத்தை வரித்தல் என்பதே ‘‘தீர்த்தவாரி’’ யாகும். தீர்த்தம் என்பது புனிதமாக […]

சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும், ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல்

சாளக்கிராமம் சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும், ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். இவை நத்தைக்கூடு, சங்கு முதலான பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது. திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியின் வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார். அங்கு ரீங்கார வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து, பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் […]

நவக்கிரகங்களை எத்தனை முறை வலம் வரலாம்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நவக்ரக வழிபாடு: நவக்கிரகங்களை எத்தனை முறை வலம் வரலாம்? வலம் வருதல் என்பது 16 உபசாரங்களில் ஒன்று. இந்தப் பணிவிடைக்கு பிரதக்ஷிணம் என்று பெயர். மூன்று முறை வலம் வந்தால், பிரதக்ஷிணம் என்ற இந்த உபசாரம் முற்றுப்பெறும். தெய்வத் திருவுருவங்களுக்கும் வலம் வருதலின் எண்ணிக்கைக்கும் சம்பந்தம் இல்லை. 9 கிரகங்கள் என்பதால், 9 முறை வலம் வரவேண்டும் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அதேபோல், இடமாகச் சுற்றுவதும் தவறு. அது, வலம் வருதலில் அடங்காது. இடமாகச் […]

ஆலயங்களுக்கு செல்கிறோம், வழிபாடுகளில் பங்கு பெறுகிறோம். அவ்வப்போது மேலதிக நல்ல விடயங்களையும் அறிந்து கொள்வோம் நண்பர்களே!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆலயங்களுக்கு செல்கிறோம், வழிபாடுகளில் பங்கு பெறுகிறோம். அவ்வப்போது மேலதிக நல்ல விடயங்களையும் அறிந்து கொள்வோம் நண்பர்களே! ஆகமங்களில் சொல்லக்கூடிய காரணங்கள் என்னவென்றால்… அந்த ஆலயத்தின் அமைப்பு, ஸ்வாமி விக்கிரகத்தின் அமைப்பு, கோபுரத்தின் அளவுகள் போன்றவை முதல் வகை. அடுத்து ஆசார்யர்களுடைய தபோ பலம். அர்ச்சகர்தான் விக்கிரகத்துக்கு பிராணன் கொடுக்கிறார். மாதா குரு பிதா’ என்பார்கள். ஒரு விக்கிரகத்துக்கு அதை செய்பவர் தாய் என்றால், உயிர் கொடுக்கும் அர்ச்சகர் பிதாவின் ஸ்தானத்தைப் பெறுகிறார். ஆலயத்தில் […]

எமக்கு ஒரு கஷ்டம் வருகிறது என்றால் நிச்சயமாக அதற்கு ஒரு காரணம் இருக்கும்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! எமக்கு ஒரு கஷ்டம் வருகிறது என்றால் நிச்சயமாக அதற்கு ஒரு காரணம் இருக்கும். இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை ! பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி,””அர்ஜூனா! போர் தான் முடிந்து விட்டதே! இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு!” என்றார். “”மைத்துனா! நீ என்னை போரில் வெற்றி பெறச் செய்தாய். மகிழ்ச்சி! ஆனால், வெற்றி பெற்றவனை, தேரோட்டி தான் கையைப் பிடித்து இறக்கி விட வேண்டும் […]

வாழ்வியல் அறம் என்ன சொல்கிறது?

தெரிந்து கொள்வோம்! வாழ்வியல் அறம் என்ன சொல்கிறது? இராமாயணத்தில் ராமரும், மாகபாரதத்தில் அர்ஜுனனும் , கந்த புராணத்தில் முருகப்பெருமானும் என்ன சொன்னார்கள்? ”இன்று போய் நாளை வா” என்ன சொல்கிறார்கள்? தீயவனாக இருந்தாலும் அவன் திருந்துவாதற்கு ஒரு சந்தர்ப்பம் தரப் பட வேண்டும், அவர்கள் அந்த வாய்ப்பை பயன் படுத்தி திருந்த வேண்டும் என்ற எதிர் பார்ப்பிலதான்!

வல்லவிநாயகபெருமானின் முப்பத்திரெண்டு (32) திருவுருவங்களையும் அவற்றின் சிறப்புக்களையும் காண்போம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நண்பர்களே இன்று எல்லாம் வல்லவிநாயகபெருமானின் முப்பத்திரெண்டு (32) திருவுருவங்களையும் அவற்றின் சிறப்புக்களையும் இங்கு காண்போம். 1.ஸ்ரீபால விநாயகர் “ குழந்தை வடிவம், யானைத்தலை; பொன்னிற மேனி; நான்கு கைகளில் ஒன்றில் வாழைப்பழம்,ஒன்றில் மாம்பழம்,ஒன்றில் கரும்பு, ஒன்றில் பலாப்பழம், துதிக்`கை’யில் அவருக்கு பிடித்த கொழக்கட்டை. 2.ஸ்ரீ தருண விநாயகர்: இளமை பொங்கும் அழகிய இளைஞனாக, ஒடிந்த தந்தம், விளாம்பழம், கரும்புத்துண்டம், அங்குசம், பாசம், நெற்கதிர், நாவற்பழம், மோதகம் தாங்கிய எட்டு கைகளும் கொண்ட சிவந்த […]

மஹாலக்ஷ்மி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நெஞ்சார்ந்த நன்றி:- Devakottai Dolphin AR Ramanathan மஹாலக்ஷ்மி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்! 1. மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள். 2. மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு. 3. லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ. 4. நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி […]

பாவம் என்போம், புண்ணியம் என்போம், என்ன என்பதை அறிந்து கொள்வோம் நண்பர்களே!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பாவம் என்போம், புண்ணியம் என்போம், முன்னைய பிறப்பில் செய்த பாவ புண்ணியங்கள் இப்பிறப்பில் என்போம். சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன??? பார்ப்போம். அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்கிறார் ஔவையார். அவரது கூற்றினைக் கருத்தில் கொள்ளும்போது நிச்சயமாக வெறும் பாவங்களை மட்டும் செய்தவன் மனிதப் பிறவியினை எடுக்க இயலாது என்பது தெளிவாகிறது. அப்படியென்றால் முற்பிறவியில் செய்த பாவங்களின் பலன்தான் இப்பிறவி என்று எடுத்துக்கொள்ள முடியாது. அதேபோல ‘ஜெனனீ ஜென்ம சௌக்யானாம் வர்த்தனீ குல […]

Scroll to top