ஆலயங்களுக்கு செல்கிறோம், வழிபாடுகளில் பங்கு பெறுகிறோம். அவ்வப்போது மேலதிக நல்ல விடயங்களையும் அறிந்து கொள்வோம் நண்பர்களே!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!

ஆலயங்களுக்கு செல்கிறோம், வழிபாடுகளில் பங்கு பெறுகிறோம். அவ்வப்போது மேலதிக நல்ல விடயங்களையும் அறிந்து கொள்வோம் நண்பர்களே!

ஆகமங்களில் சொல்லக்கூடிய காரணங்கள் என்னவென்றால்… அந்த ஆலயத்தின் அமைப்பு, ஸ்வாமி விக்கிரகத்தின் அமைப்பு, கோபுரத்தின் அளவுகள் போன்றவை முதல் வகை. அடுத்து ஆசார்யர்களுடைய தபோ பலம். அர்ச்சகர்தான் விக்கிரகத்துக்கு பிராணன் கொடுக்கிறார். மாதா குரு பிதா’ என்பார்கள். ஒரு விக்கிரகத்துக்கு அதை செய்பவர் தாய் என்றால், உயிர் கொடுக்கும் அர்ச்சகர் பிதாவின் ஸ்தானத்தைப் பெறுகிறார்.

ஆலயத்தில் நடைபெறும் உற்சவங்கள். உற்சவங்கள் மூலம் ஆலயங்களுக்கு மிகப் பெரிய அளவில் ஆற்றல் கிடைக்கிறது. ஆக, ஆலயங்களின் அமைப்பு, அர்ச்சகரின் தபோபலம், உற்சவங்கள் ஆகிய மூன்றும்தான் ஆலயத்தில் தெய்வ சாந்நித்யம் நிலைபெற்றிருப்பதற்குப் பிரதான காரணங்கள். ஆகவே ஆலய உத்சவங்கள் எவ்வளவு பிரதானம் என்பதை இங்கு பதிய விரும்புகிறோம்.

கோயிலுக்கு வரும்போது பக்தர்கள் படிக்கும் சிவநாமம், விஷ்ணுநாமம், சகஸ்ரநாமங்கள், மேலும் அங்கு சொல்லபடும் வேதங்கள், மந்திரங்கள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றால் ஏற்படக்கூடிய தெய்விக அதிர்வலைகள், ஆலயத்துக்கு கூடுதல் ஆற்றலைத் தருகின்றன. அதன் மூலம் நாங்கள் வழிபடும் போது மேலும் பலன் அடைகிறோம் நண்பர்களே!

No photo description available.
ஆலயங்களுக்கு செல்கிறோம், வழிபாடுகளில் பங்கு பெறுகிறோம். அவ்வப்போது மேலதிக நல்ல விடயங்களையும் அறிந்து கொள்வோம் நண்பர்களே!
Scroll to top