Author : Dr. N. Somash Kurukkal

புது மணப்பெண் வருகையும் நெல்லும்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! புது மணப்பெண் வருகையும் நெல்லும்!!! நண்பர் ஒருவர் கேட்டிருந்தார் பின்வருமாறு:- திருமணமாகி மணமக்கள் வீட்டினுள் நுழையும்போது வாசலில் மணமகள் நிறைநாழியை காலால் தட்டிவிட்டு வருவது எதைக் குறிக்கிறது ??? இது தமிழர்களின் பண்பாடு / கலாச்சாரம் அல்ல! இந்த வழக்கம் இலங்கையிலோ , ஈழத்திலோ, அல்லது தமிழ் நாட்டிலோ இல்லை!!! இது முழுக்க முழுக்க வட இந்திய கலாச்சாரம்! பிரதானமாக மகாராஷ்டிர மாநில மக்களின் கலாச்சாரம். அந்த நெல்லை அப்படி பரப்பி விதைத்தால் […]

ஆலய விக்கிரகங்களும் வஸ்திரமும்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே ஆலய விக்கிரகங்களும் வஸ்திரமும்!!! நண்பர்கள் சிலர் கேட்டிருந்தார்கள் , சில கோயில்களில், அம்பாள் விக்கிரகத்துக்கு வஸ்திரம் ஏதும் சார்த்தாமல் அபிஷேகம் செய்தார் அர்ச்சகர். இதுகுறித்துக் கேட்டால், ‘விக்கிரகத்திலேயே வஸ்திரம் செதுக்கியுள்ளனர். தனியே வஸ்திரம் அணிவிக்கத் தேவையில்லை’ என்றார். இது சரிதானா? என்று ! இல்லை! அபிஷேகங்கள் நடைபெறும்போது விக்கிரகங்களுக்கு வஸ்திரம் ஒன்று அணிந்துதான் அபிஷேகங்கள் செய்ய வேண்டும்! யானை பொம்மையைப் பார்க்கும் சிறுவனுக்கு அதில் யானைதான் தெரியும்; அது எந்த மரத்தால் செய்யப்பட்டது […]

ஆரத்தியும் அதன் தட்டில் போடும் காசும்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆரத்தியும் அதன் தட்டில் போடும் காசும்!!! ஆரார்த்திகம்’ என்ற சொல்லை, நமது மொழியில் ஆரத்தி என்கிறோம். தெய்வங்களின் பணிவிடைகளிலும் ஆரத்தி உண்டு. பிரதானமாக கற்பூர ஆராத்தி!!! மேலும் திருமணங்கள், புதிய வீடு குடிபுகல், உபநயனம் போன்றவற்றிற்கும் ஆரத்தி உண்டு! கங்கை நதிக்கு, மாலைவேளையில் பக்தி சிரத்தையுடன் பக்தர்கள் ஆரத்தி எடுப்பது உண்டு. ஆலயங்களில் தீபம் மற்றும் கற்பூர ஆரத்திகள் அன்றாடம் நிகழும். வீட்டின் வாரிசை சுமந்து வரும் தாயின் மீதும், குழந்தையின் மீதும் […]

திருகோணமலையும்… திருக்கேதீச்சரமும்..!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! திருகோணமலையும்… திருக்கேதீச்சரமும்..! புராணச் சிறப்பு மிகுந்த பல்வேறு சிவத்தலங்களை தரிசித்து சிந்தை மகிழ்ந்த திருஞானசம்பந்தர் ராமேஸ்வரம் வந்தார். அங்கே கோயில் கொண்டிருக்கும் ஈஸ்வரனை பாடிப்பரவி வழிபட்டவர், அற்புதமான அந்தத் தலத்தில் இருந்தபடியே, மற்றுமொரு சிவத்தலத்தையும் போற்றிப் பாடினார். ‘கோயிலுஞ் சுனைங் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே…’ என்று அவர் மனமுருகிப் பாடி வழிபட்டது, இலங்கைத் தீவின் திருக்கோணமலை ஈஸ்வரனை! கொழும்பில் இருந்து சுமார் 256 கி.மீ தூரத்தில் உள்ள இந்தத் தலத்தை அருணகிரிநாதர், […]

சுப காரியங்களின்போது, நாழி நிறைய விதை நெல் வைத்திருப்பார்கள். விதை நெல்லுக்குப் பதிலாக அரிசி நிரப்பி வைக்கலாமா? இதற்கான தாத்பரியம் என்ன? அறிவோம்! தெரிவோம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சுப காரியங்களின்போது, நாழி நிறைய விதை நெல் வைத்திருப்பார்கள். விதை நெல்லுக்குப் பதிலாக அரிசி நிரப்பி வைக்கலாமா? இதற்கான தாத்பரியம் என்ன? அறிவோம்! தெரிவோம்!!! ஆலய உத்சவங்கள், விவாகம், புது மனை குடிபுகல், போன்ற அனைத்து சுபகாரியங்களுக்கும் ,விதை நெல்தான் வைக்க வேண்டும். அரிசியை வைக்கக் கூடாது. நாம் செய்யும் சுப காரியங்கள் வளர்ந்தோங்க வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் விதை நெல்லை வைக்கிறார்கள். நெல் விதைத்தாலும் அரிசிதான் முளைக்கும். உமி தானாகவே அகன்றுவிடும். […]

தர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது ?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! அது என்ன 12 வருஷங்கள்? தர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது ? அண்ணன்- தம்பி, தந்தை- தனயன் எனும் உறவில் உள்ளவர்கள், 12 வருட காலம் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் இருந்தால், அவர்களது தொடர்பு தானாகவே காலாவதியாகிவிடும்; மீண்டும் அவர்களுக்கான தொடர்பை- உறவைப் புதுப்பிக்க, உரிய பரிகாரத்துடன் இணையவேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். முதியவரான தந்தை காணாமல் போய்விட்டார்; அவர் இருக்கும் இடம் உட்பட, எந்தவிதத் தகவலும் தெரியவில்லை. மகனும் முற்றிலும் மறந்த நிலையில் […]

யஜ்ஞோபவீதம் எனப்படும் பூணூல் – சிறு குறிப்பு!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! யஜ்ஞோபவீதம் எனப்படும் பூணூல் – சிறு குறிப்பு!!! உபநயனம் செய்யப்பெற்றவனுக்கு எப்போதும் இடது தோளில் தொங்கவேண்டிய ஒன்று பூணூல். துறவறம் ஏற்கும்போது மட்டுமே , அது தோளில் இருந்து விலகும். முற்றிலும் அறுந்துவிட்டால், உடனே மாற்ற வேண்டும். அழுக்கு ஏறியிருந்தாலும், மூன்றில் ஒரு நூல் அறுந்து போனாலும், எந்த நிமிடத்திலும் அறுந்து போகும் நிலையில் நைந்திருந்தாலும், பிறப்பு- இறப்பு போன்ற தீட்டுபட்ட வேளையிலும், பெண்மணிகள் மூன்று நாள் தீட்டைச் சந்திக்கும் வேளையிலும், தன்னைத் […]

சனீஸ்வர வழிபாடு!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சனீஸ்வர வழிபாடு!!! அண்மையில் சனி மாற்றம் என்று பலரும் இல்லை இல்லை என்று இன்னொரு சாராரும் ஆலயங்களும் பலவாறு குழப்பத்தில் இருந்தார்கள் என்பதைக் கண்டோம்! ஒரு பஞ்சாங்கம் கடந்த வாரம் சனி மாற்றம் என்றும் இன்னொரு பஞ்சாங்கம் அடுத்த வருடம் என்று அறிவித்தார்கள்! தமிழ் நாட்டில் வெளிவரும் பஞ்சாங்கங்களும் பலவாறு கணித்து இருந்தார்கள்! நாம் அவைபற்றி அதிகம் குழம்ப வேண்டிய தேவை இல்லை! காலாகாலமாக நாம் எந்தப் பஞ்சாங்கத்தை பின் தொடர்கிறோமோ அது […]

புதுமனை புகும்போதும் , ஆலய விழாக்களிலும், கும்பாபிஷேக நேரங்களிலும் முதலில் பசுமாட்டை உள்ளே அழைத்துச் செல்வது ஏன்? அறிந்து கொள்வோம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! புதுமனை புகும்போதும் , ஆலய விழாக்களிலும், கும்பாபிஷேக நேரங்களிலும் முதலில் பசுமாட்டை உள்ளே அழைத்துச் செல்வது ஏன்? அறிந்து கொள்வோம்! பசுவின் உடலில் பதினான்கு உலகங்களும் அடக்கம் என்கிறது தர்மசாஸ்திரம் (கவாமங்கே ஷ§திஷ்டத்தி புவனானி சதுர்தச). தேவதைகளும் பசுவில் வாசம் செய்கிறார்கள். பசுவின் பாலில் சந்திரனும், நெய்யில் அக்னி தேவனும் உறைந்திருப்பார்கள் என்கிறது வேதம் (எததிவா அக்னேஸ்தேஜோயத்கிருதம் எதத்ஸோமஸ்ய யத்பய:) பஞ்சகவ்யம், (பால், தயிர், நெய், சாணம், கோமூத்திரம்) அபிஷேகத்துக்கும் உகந்தது, மருந்தாகவும் […]

”  நாந்தி  சோபனம் ” பற்றிய சிறு குறிப்பு!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ”  நாந்தி  சோபனம் ” பற்றிய சிறு குறிப்பு!!! திருமணம், உபநயனம் போன்ற சுபநிகழ்ச்சியின் போது, மறைந்த முன்னோர்களில் மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்காக நடத்தப்படுவது “நாந்தி சோபனம் .’. அதாவது தந்தை, தந்தையின் தந்தை, அவரின் தந்தை, இந்த மூவரின் மனைவிகள், தாய் வழியிலும் இதே வகையில் மூவரும், அவர்களின் மனைவிகளுமாக உள்ள முன்னோர்களை “சோபன பித்ருகள்’ என்று குறிப்பிடுவர். இவர்களின் ஆசியால் குடும்பத்தில் மங்களமும், சந்தோஷமும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். திருமணம், […]

Scroll to top