தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
மலர்கள் கிடைக்கவில்லை என்றாலும் வழிபாடு இயற்றலாம்!!!
பூஜை புனஸ்காரங்களின் போது மலர்கள் அவசியமானவை. அவசரத்துக்கு பூக்கள் கிடைக்காவிட்டால் அந்த பூஜைகளை நிறுத்தவும் முடியாது. நிறுத்தவும் கூடாது, நாளை என்று பின் போடவும் கூடாது. எங்கள் வழிபாட்டு முறைகளில் சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட மாற்றுவழிகள் பல உண்டு நண்பர்களே!!!
துளசி, தாமரை, வில்வம் இவை மூன்றைத் தவிர மற்ற மலர்களைக் கண்டிப்பாக மீண்டும் பயன் படுத்தக் கூடாது. பூக்கள் கிடைக்காவிடில் அட்சதையினால் அர்ச்சிக்கலாம். நெற்பொரியைப் பயன்படுத்தலாம். ‘லாஜ புஷ்பம்’ என்று அவற்றைக் குறிப்பிடுவார்கள். நெருப்பிலிருந்து கிடைப்பதால் மிகுந்த தூய்மை வாய்ந்தது நெற்பொரி.
நல்ல அரிசியில் சிறிது நெய் விட்டுப் பிசைந்து, பிறகு சிறிது மஞ்சள் பொடி கலந்து அட்சதையைத் தயாரித்து வீட்டுப் பூஜை அறையில் வைத்துக் கொண்டால் குறையே வராது. சாஸ்திரம் இவற்றைச் செய் என்றும், இவற்றைச் செய்யக் கூடாது என்றும் கட்டளை இடும். அவற்றை நாம் நம்பிக்கையுடன் கடைப்பிடிப்பதே நமக்கு உயர்ந்த பலன்களை அளிக்கும்.
நம் வீடுகளிலேயே மலர்களை வளர்த்து கடவுளுக்கு அளிப்பது மிகச் சிறந்தது. முடியாத போது கடைகளில் வாங்கிச் செய்யவேண்டும். வெளியூர்களில் இருக்கும் போது அட்சதை, நெற்பொரி போன்றவற்றை பக்தியுடன் கடவுளுக்கு அர்ப்பணிப்பதால் நிறைவான பலன்களைப் பெறலாம். பக்தியே முக்கியம்.
கிடைக்கும் இடங்களில் நிறைவாக செய்வதிலும், கிடைக்காத இடங்களில் பக்தியும் பாவனையும் ஒன்று கூடி செய்வதிலும் தவறில்லை. நொண்டிக் காரணங்களை சொல்லி செய்ய வேண்டியவற்றை செய்யாமல் விடக்கூடாது நண்பர்களே!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
மலர்கள் கிடைக்கவில்லை என்றாலும் வழிபாடு இயற்றலாம்!!!