கிடைத்ததை பயன் படுத்த வேண்டும்!!! எல்லா நேரங்களிலும் எல்லாம் கிடைத்து விடுவதில்லை!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
கிடைத்ததை பயன் படுத்த வேண்டும்!!!
எல்லா நேரங்களிலும் எல்லாம் கிடைத்து விடுவதில்லை!
சுத்தமான பசும்பால், பசுஞ்சாண வறட்டி போன்றவை மங்கல வைபவங்கள் வேறு எதுவாக இருந்தாலும் கிடைக்காத சூழலில், பாக்கெட் பால் போன்று தற்காலத்துக்கு ஏற்ப கிடைப்பதைக் கொண்டு ஆராதனைகளைச் செய்ய வேண்டும்!!! கிடைக்கவில்லையே என்று கையை பிசைந்து கொண்டிருக்க முடியாது!!!
நெருப்பை அணையாமல் வைத்துக்கொள்ள சாணி உருண்டை பயன்பட்டது. இன்றும் ஹோமங்கள் முதலாவற்றிக்கு சாணி விறாட்டி பயன் படுகின்றன. ஐரோப்பிய , அமெரிக்க நாடுகளில் இந்த சாணி விறாட்டி கிடைக்கின்றன , அவற்றை குருமார்கள் பயன்படுத்துவதை காணலாம்!!!
தவிர… வீட்டை சுத்தம் செய்ய, விறகின் பற்றாக்குறையை நிறைவு செய்ய, பூத உடலை எரிக்க, பயிருக்கு உரமாக, வாசலில் தண்ணீர் தெளிக்க, பறங்கிப் பூவைச் செருகி வைக்க, ஈயம் பூசிய பாத்திரத்தைச் சுத்தம் செய்ய, பஞ்சகவ்யத்தின் தூய்மையை உறுதி செய்ய, மூங்கில் கூடைகள் மற்றும் முறங்களைப் பராமரிக்க, குதிரில் சேமித்த அரிசியைப் பாதுகாக்க, நீரில் கிரகணத்தின் நிழலைக் காணும்போது கண் கூசாமல் இருக்க… இப்படிப் பல இடங்களில் சாணியின் சேர்க்கை தேவைப்படும்.
பிற்காலத்தில் சாணம், விஞ்ஞானத்தின் கண்ணில் பட… gas (கோபர் gas) ஆக மாற்றப்பட்டது; சமையல் எளிதானது. ஊதுபத்தி போன்ற பல பொருள்களுக்கும் அது மூலப்பொருள் ஆனது. இதுபோன்ற அதீத தேவைகளின் விளைவால் ஏற்பட்ட சாணத்தின் இழப்பு, குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கு மாற்று பொருளைத் தேட வைத்தது.
பசுவின் பால் தரமானது; தாய்ப்பாலின் பற்றாக் குறையையும் தீர்ப்பது. ஆண்டவனுக்கான அபிஷேகங்களிலும், உபவாசத்தின்போது உணவாகவும், மருந்து மற்றும் பானங்கள் தயாரிப்பிலும் பால் பயன்படும்.
பால் ஒரு முழுமையான உணவு. இரவில் பாலைக் காய்ச்சி, உறை போட்டு வைக்க… மறு நாள் காலையில் தயிராகியிருக்கும். அதைக் கடைந்து வெண்ணெய் எடுத்து மீண்டும் காய்ச்சி, நெய் தயாரிப்பதுண்டு. இந்த நெய் தரமானது. ஆனால், இதில் ஏற்படும் கால விரயத்தைத் தவிர்த்து, பாலிலிருந்து நேரடியாக நெய்யை எடுக்க உதவியது
விஞ்ஞானம். மட்டுமன்றி, நாள்பட்ட பாலையும் குளிர்சாதன அறைகளில் வைத்துப் பராமரிப்பதன் மூலம் பாலின் பற்றாக்குறையையும் விஞ்ஞானம் சரி செய்தது.
விஞ்ஞானம் நமக்குப் பிடிக்கும். அதைப் பயன்படுத்திப் பழக்கப்பட்டுவிட்டோம். இனி, பழைய நடைமுறைக்குத் திரும்ப இயலாது. எனவே, கிடைப்பதை வைத்துச் செயல்படுங்கள்; பலன் உண்டு.
இக்கட்டான சூழலில் கிடைத்ததைப் பயன் படுத்துவதை தர்மசாஸ்திரம் ஏற்கும்.
ஆனால், நல்ல சாணம், பால் மற்றும் நெய் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கும்போது அவற்றையே ஏற்க வேண்டும்.
அவை கிடைக்காத போது மாற்று வழியை நாம் பயன் படுத்த வேண்டும்!
ஒன்றுமே கிடைக்கவில்லை என்று சொல்லிக் கொண்டு நாம் கடவுள் வழிபாட்டை, செய்ய வேண்டிய கிரியைகளை கை விடப்படாது அல்லவா! நண்பர்களே!!!
ஆன்மீக நூலில் இருந்து தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா . இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர் , www.modernhinduculture.com
May be an image of temple and text
கிடைத்ததை பயன் படுத்த வேண்டும்!!! எல்லா நேரங்களிலும் எல்லாம் கிடைத்து விடுவதில்லை!
Scroll to top