தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற விடயங்களில் ஓர் தெளிவு பெறுவோம்!!!
இந்த சஷ்டியபத பூர்த்தி , பீமரத சாந்தி, சதாபிஷேகம் போன்ற வைபவங்களை அவர்களின் பிள்ளைகள்தான் நடாத்த வேண்டும் என்ற ஓர் எண்ணம் எம் மத்தியில் பரவலாக உண்டு!!! அப்ப பிள்ளைகள் இல்லாதவர்கள் இந்த சாந்தியை செய்வது எப்படி என்ற எண்ணமும் எழுகிறது!!!
பிள்ளைகள் முன்நின்று பெற்றோர்களின் இவ்வகையான சாந்திகளை செய்வது பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மிகுந்த பலனைத் தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை!! அது மிகுந்த மகிழ்ச்சியாகும்! ஆனால்.. .. …..
பிள்ளைகளை வைத்து சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்றவை எழவில்லை. அவை மனிதனாகப் பிறக்கும் ஒவ்வொருவரது உரிமை. அன்றைய தினம் தனது மகிழ்ச்சிக்கும், சுகாதாரத்துக்கும், நீடித்த ஆயுளுக்கும் பல இறையுருவங்களை வேண்டி வழிபாடு செய்கிறான். பண்டிகையோடும் கொண்டாட் டத்தோடும் இணைந்த வழிபாடுகளில், பலரும் கலந்துகொள்ள ஏதுவாகப் பல நிகழ்வுகள் கலந்திருக்கும்.
சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் ஆகியன பிள்ளைகள் இருப்பவர்களுக்கும் இல்லாதவர் களுக்கும் பொருந்தும். இவை, பிள்ளைகளை எதிர்பார்த்து நடத்தும் நிகழ்வுகள் அல்ல. ஆனால் பிள்ளைகள் முன்நின்று நடத்துவது மிகுந்த சிறப்பு!
சில பல குடும்பங்களில் பெற்றோர் பிள்ளைகள் நல்லுறவு இல்லை என்றால் அந்த பெற்றோர்கள் இவ்வகையான சாந்திகளை புறம் தள்ள முடியாது!!! அவர்களாகவே கடவுள் வழிபாடுகளுடன் இவற்றை மேற் கொள்ள முடியும் நண்பர்களே!!!
ஆடம்பரம் இல்லாமலேயே இந்த வழிபாடுகளை நடத்தலாம். 60 வயது நிரம்பியவர்களுக்கும் 80 வயது 10 மாதம் நிரம்பியவர்களுக்கும் இவை இரண்டும் உண்டு. பிள்ளைகள் செய்யவில்லை என்றால், பெற்றோர்களே இந்த வைபவங்களை நடத்திக்கொள்ளலாம்.
ஏழ்மை இடையூறாக இருந்தால், அந்தத் தினத்தில் கடவுளை வணங்கி, இயலாமையை வெளிப்படுத்தி, அதன் நிறைவை அருளும்படி வேண்டிக்கொள்ளலாம்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற விடயங்களில் ஓர் தெளிவு பெறுவோம்!!!