இந்தியாவுக்கு ராமேஸ்வரம்… இலங்கைக்கு நகுலேஸ்வரம்!!!! – கீரிமலை தீர்த்தம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே;
இந்தியாவுக்கு ராமேஸ்வரம்… இலங்கைக்கு நகுலேஸ்வரம்!!!!
தமிழகத்தின் ராமேஸ்வரம் போன்று, அதற்கு இணையாக இலங்கையில் சிறப்புற்றுத் திகழ்கிறது நகுலேஸ்வரம். இந்தத் தலத்திலுள்ள ஆலயம், கிருதயுகத்தில் தோன்றியதாகப் புராணங்களும் இலக்கியங்களும் கூறுகின்றன. இலங்கையில் உள்ள பஞ்சேஸ்வரங்களில் ஒன்றாக இது விளங்குகிறது.
நகுல முனிவர் இங்கே நீராடி வழிபட்டு, தனது கீரி முகம் நீங்கி நலம்பெற்றாராம். இதனால், இத்தலம் கீரிமலை என்றும் நகுலேஸ்வரம் என்றும் போற்றப்படுகிறது. நகுலம் என்பதற்குக் கீரி என்பது பொருளாகும். சோழ இளவரசி மாருதப்புரவீகவல்லி, இத்தலத் தீர்த்தத்தில் நீராடி வழிபட்டு, குன்மநோய் நீங்கப் பெற்றாளாம்.
அத்துடன் அவளின் குதிரை முகமும் மாற, பேரழகு பெற்றாளாம். அதன்பின், மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தை எழுப்பினாள் என மாவைப்புராணம் குறிப்பிடுகிறது. இத்தலம் 19-ம் நூற்றாண்டுக்கு முன்பே கடல்கோள் சீற்றத்தினால் நீருக்கு அடியில் அமிழ்ந்துபோன விவரத்தை, யாழ்ப்பாணப் புலவர் ஆறுமுகநாவலர், தாம் எழுதிய கீரிமலைச் சிவன் கோயில் வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார். அதன் மூலமே இவ்வாலயத்தின் சிறப்பு வெளிவந்தது.
இத்தலம் காசி மற்றும் ராமேஸ்வரத்துக்கு இணை யான தலமாகப் போற்றப்படுகிறது. இங்கே வந்து தலத்தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டுச் சென்றால், அனைத்துவித தோஷங்களும் நீங்கி பலன் பெறலாம் என்பது நம்பிக்கை!
எண்ணற்ற சைவப்பெருமக்கள் தங்கள் பித்ரு கடன்களைக் கீரிமலைத் தீர்த்தத்தில் செலுத்தி வருகின்றனர்.
அதன்பின் ஆலயம்சென்று மோட்ச தீபம் ஏற்றி, ஆத்ம சாந்தி பிரார்த்தனை செய்து வேண்டுதலை, நிறைவு செய்கின்றனர்.
காசி ராமேஸ்வரம் சென்று வழிபட முடியாதவர்கள் அந்த ஆலயங்களுக்கு நிகரான கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்துக்கு சென்று வழி பட்டு பலனைப் பெறலாம்!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , நிறுவன இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
May be a graphic of text

 

இந்தியாவுக்கு ராமேஸ்வரம்… இலங்கைக்கு நகுலேஸ்வரம்!!!! – கீரிமலை தீர்த்தம்!
Scroll to top