தெட்சணாமூர்த்தி வேறு குரு பகவான் வேறு! குருபகவான் என்றவுடன் சிலர் தெட்சணாமூர்த்தியை வழிபடுவதைப் பார்த்திருக்கிறோம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
தெட்சணாமூர்த்தி வேறு குரு பகவான் வேறு! குருபகவான் என்றவுடன் சிலர் தெட்சணாமூர்த்தியை வழிபடுவதைப் பார்த்திருக்கிறோம்!
”’குருப்ரஹ்மா: குருர்விஷ்ணு: குரு தேவோ மஹேஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மைஸீ குருவே நம:”’
என்ற ஸ்லோகத்தில் குரு என்ற வார்த்தைக்கு தட்சிணாமூர்த்தி என்று அர்த்தம். ஆனால் குரு என குறிப்பிடப்படுவதால் குரு பகவானும், தட்சிணாமூர்த்தியும் ஒன்று என பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
நவகிரகங்கள் என்பது இறைவன் இட்ட கட்டளையை, கடமையைச் செய்யக் கூடிய ஒன்பது கோள்களாகும். அவற்றில் ஒருவர் தான் குரு பகவான் எனும் ப்ரஹஸ்பதி.
சிவன் கோயிலில் தென்முகம் பார்த்து அருள்பாலிப்பவர் தட்சிணாமூர்த்தி. இவர் எப்போது தியானத்தில் ஆழ்ந்திருப்பார். தட்சிணாமூர்த்தி என்பவர் ஞான குரு. அவருக்கு விருப்பமான நிறம் வெண்மை. அதனால் அவர் வெண்ணிற ஆடையில் அருள்பாலிப்பார். (ஸ்வேதாம்பரதரம் ஸ்வேதம் என வேதத்தில் குறிப்பிடப்படுகிறது. அதாவது ஸ்வேதம் என்றால் வெண்மை என்று பொருள்.
ஆகமங்கள் மற்றும் சிற்ப நூல்களில் குறிப்பிடப்படும் ஶ்ரீதட்சிணாமூர்த்தியின் பல்வேறு வடிவங்கள்: ஞான தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணா மூர்த்தி, வீணாதர(கேய) தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி, வியாக்யான தட்சிணா மூர்த்தி, வீர தட்சிணாமூர்த்தி, லட்சுமி தட்சிணாமூர்த்தி. ராஜ தட்சிணா மூர்த்தி, கீர்த்தி தட்சிணாமூர்த்தி, சக்தி தட்சிணா மூர்த்தி, பிரம்ம தட்சிணாமூர்த்தி, சுத்த தட்சிணாமூர்த்தி, திவ்ய தட்சிணாமூர்த்தி.
ஞானாசாரியனாக- ஞான திருவடிவாக வழிபடப்படும் சிவ பெருமானின் திருக்கோலமே ஶ்ரீதட்சிணாமூர்த்தி திருவடிவம்.
‘தட்சிணம்’ என்பதற்கும் ‘தென்னன்’ என்ற தமிழ்ச் சொல்லுக்கும் தெற்கு, ஞானம், சாமர்த்தியம், ஆற்றல், ஆளுமை, யோகம் மற்றும் வீரம் என்று பல பொருள்கள் உண்டு. இவை யாவற்றையும் உடையவர் ஆதலால் ஶ்ரீதட்சிணாமூர்த்தி எனப்படுகிறார். இவர் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பவர்.
ஆகம விடயங்களை அறிந்து கொள்வோம். அவ்வழியே வழிபாடுகளை செய்து பலன் அடைவோம்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, நிறுவன இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
May be an image of text
தெட்சணாமூர்த்தி வேறு குரு பகவான் வேறு! குருபகவான் என்றவுடன் சிலர் தெட்சணாமூர்த்தியை வழிபடுவதைப் பார்த்திருக்கிறோம்!
Scroll to top