தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
காமாக்ஷி விளக்கின் வழிபாட்டின் மகிமை:
ஆலய வழிபாடுகள் , திருமணங்கள், கிருகப்பிரவேசம், இன்னும் பல மங்கல நிகழ்வுகளில் இந்த காமாக்ஷி விளக்கின் முக்கியத்துவத்தைப் பார்த்திருப்பீர்கள்.
காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றப்படும்போது, அந்த இடத்தில் அம்பிகையின் அருளாற்றல் நிறைகிறது. ‘காம’ என்றால், ஆசை – விருப்பம் என்று பொருள். நம்முடைய நியாயமான விருப்பங்களை ஆள்பவளும் நிறைவேற்றுபவளும் அன்னை காமாட்சி.
கா’ என்றால் சரஸ்வதி; ‘மா’ என்றால் லட்சுமி. `அட்சி’ என்றால் கண்கள். சரஸ்வதி, லட்சுமி ஆகியோரைக் கண்களாகக் கொண்டவள் காமாட்சி. காமாட்சி என்ற தெய்வப் பெயரின் தத்துவம் இதுதான்!
ஒருவரின் வாழ்க்கை சிறப்பாக அமைய, எப்படி வாழவேண்டும் என்பது பற்றிய தெளிவான அறிவு, பரந்த சிந்தனை, பொருளாதார வசதி, உடல் ஆரோக்கியம் ஆகியவை அவசியம் வேண்டும். அவற்றை நமக்கு அருள்பவள்தான் காமாட்சி.
ஆகவே நண்பர்களே, எந்த மங்கல நிகழ்வாக இருந்தாலும் காமாட்சி விளக்கேற்றி அம்பாளின் அருட்கடாட்சத்தைப் பெறுவோம்!!! எனவே, காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வழிபடும்போது, நம்முடைய வீட்டில் சகல மங்கலங்களும் நிறைவதுடன், வாழ்க்கையைப் பற்றிய தெளிவான அறிவும் நமக்குக் கிடைக்கும்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, நிறுவன இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com

காமாக்ஷி விளக்கின் வழிபாட்டின் மகிமை: