ஒருமுறையேனும் காசிக்கு வந்தால் பாவம் நீங்கும்;

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
ஒருமுறையேனும் காசிக்கு வந்தால் பாவம் நீங்கும்;
எம்மவர்கள் பலர் தமது வாழ்க்கையில் ஒரு தடவை என்றாலும் காசிக்கு போய் கடமைகள் செய்து வழிபட வேண்டும் என்ற பெரு விருப்பத்துடன் இருப்பதை பல இடங்களில் காணக்கூடியதாய் உள்ளது!!! அப்படியான காசி பற்றிய சிலபல விடயங்களைப் பற்றி அறிவோம்!
சிவனும் பார்வதியும் மணம் முடித்து பூமிக்கு வந்த போது பிரளய காலத்திலும் அழியாத காசியை தாங்கள் வசிக்க தேர்ந்தெடுத்தனர் என்றும், அவர்கள் கால் ஊன்றிய இடமே காசி என்றும் காசிகாண்டம் கூறுகிறது.
காசியில் உயிர் துறக்கும் உயிர்களின் காதுகளில் காசி விஸ்வநாதர் பிரணவ மந்திரம் ஓதி, மோட்சமடையச் செய்கிறார் என்பது ஐதீகம். இங்கு பல கோடி சிவ லிங்கங்கள் இருப்பதாக பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது. பகவான் மகாதேவ், தனது திரிசூலத்தின் மீது நின்று, காசியைப் படைத்தார் என்பது ஐதீகம்.
இந்தப் பிறவியில் ஒருமுறையேனும் காசி க்ஷேத்திரத்துக்கு வந்து, காசிவிஸ்வநாதரையும் விசாலாட்சியையும் தரிசித்து வந்தால், இந்தப் பிறவியில் செய்த பாவங்கள் தொலையும் என்றும் மோட்சம் நிச்சயம் என்றும் விவரிக்கிறது காசியம்பதி ஸ்தல புராணம்!
காசிக்கு அருந்தனா, சுதர்சனா, பிரம்மாவதாரா, பூபவதி, ராமநகரா, மாளநி, காசிபுரா, கேதுமதி ஆகிய பெயர்களும் உண்டு. தவிர மச்ச புராணம் அவிமுக்தா க்ஷேத்திரம் என்றும், கூர்ம புராணம் மற்றும் காசி ரகசியம் ஆனந்தவனம் என்றும் குறிப்பிடுகின்றன.
மேலும், ஈசன் இங்கு தங்கி அருளுவதால் ‘ருத்ர வாசம்’ என்றும் ஞானம் வளர்க்கும் பூமி என்பதால் ஞானபுரி என்கிற பிரம்மவர்த்தனா என்றும் ஸ்காந்த புராணம் கூறுகிறது. வெள்ளைக்காரர்களால் ‘பனராஸ்’ என்று குறிப்பிடப்பட்டதும் இந்த நகரமே.
சிவபெருமான் அருளால் சனி பகவான் நவக்கிரகங்களில் ஒன்றா னது இங்குதான். காசி மாநகரிலுள்ள சிவலிங்கங்கள்: சுயம்பு லிங்கங்கள்- 11,
காசி திருத்தலத்தில், பதினோரு சுயம்பு லிங்கங்கள் உள்ளன. தேவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட 46 சிவலிங்கங்கள் உள்ளன. முனிவர்களும் யோகிகளும் 47 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்துள்ளனர். நவக்கிரகங்கள் வணங்கி வழிபட்ட ஏழு சிவலிங்கங்கள் உள்ளன. சிவகணங்கள் 40 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டன. சிவனடியார்களும் பக்தர்களும் 295 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செது வழிபட்டனர். காசி திருத்தலத்தில் மேலும் 65 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன காசியின் பிரமாண்டத்தை விவரிக்கிறார்கள் பக்தர்கள்.
‘முந்தைய ஜன்மங்களில் ஏராளமான ஆலயங்களுக்குச் சென்று வழிபட்ட உயிர்களுக்கு மட்டுமே இந்த ஜன்மத்தில் காசி நகரின் கதவுகள் திறக்கும்’ என்கிறது சிவமகா புராணம்.
ஆகவே நண்பர்களே, ஆலயம் செல்வோம் , ஆலயம் தொழுவோம் , இறைவன் அருளைப் பெறுவோம்!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர், www.modernhinduculture.com
May be an image of 1 person, body of water and temple
ஒருமுறையேனும் காசிக்கு வந்தால் பாவம் நீங்கும்;
Scroll to top