பாலாலயம் / பாலஸ்தாபனம் – சிறு குறிப்பு!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
பாலாலயம் / பாலஸ்தாபனம் – சிறு குறிப்பு!
கும்பாபிஷேகம் செய்து 12 வருடங்கள் ஆகும் போதும் , ஆலயங்களில் திருப்பணி வேலைகள் ஏதும் நடைபெற வேண்டும் என்ற நிலைமை ஏற்படும் பாலாலயம் என்ற இளங்கோயில் அமைக்கப்படும்! அடியவர்களின் வழிபாடுகளுக்கும் நித்திய பூஜைகளுக்கும் எந்த வித இடையூறுகளும் இருக்கப்படாது என்ற எண்ணத்தில் பாலாலயம் என்ற இளங்கோயில் அமைக்கப் பெற்று கும்பாபிஷேகம் நடைபெற வேண்டிய மூல ஆலய புனருத்தான வேலைகள் ஆரம்பிக்கப் படுகின்றன!!!
ஆலயங்கள் எப்படிப் பராமரிக்கப்பட வேண் டும், அங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கக்கூடிய இறைவனை எப்படி வழிபட வேண்டும் என்று ஆகமம் வழிகாட்டுகிறது. அவ்வகையில் பாலாலயம் அல்லது இளம் கோயில் என்ற ஓர் அமைப்பை ஸ்தாபித்து இறைவரை அங்கு எழுந்தருளப் பண்ணி வழிபாடுகள் இயற்றுவது பற்றி ஆகமங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
ஆலயங்களில் திருப்பணி செய்யும்போது, அந்த இறை சக்திக்கு எவ்விதமான பாதிப்பும் வரக்கூடாது; அதனால் நமக்கு எந்தவிதமான தீங்கும் வரக்கூடாது என்பதால், பாலாலயம் அல்லது இளம் கோயில் அமைத்து, இறை சக்தியை வேறு ஒரு பிம்பத்துக்கு மாற்றி வழிபாடுகளைத் தொடர வழிவகை செய்வார்கள்.
குறிப்பிட்ட விடயங்களை மந்திர பூர்வமாகக் கூறி, இறை சக்தியை அவற்றில் மாற்றி நாம் வழிபடலாம் என்று ஆகமங்கள் அறிவுறுத்துகின்றன. ஆக, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம் பொருளை, எப்படி ஆலயக் கருவறையில் வழிபட்டு பயன்பெறுகிறோமோ, அப்படி பாலாலயத்திலும் தரிசித்து வழிபடலாம்.
மூல ஆலயத்தில் இருக்கும் அதே சக்தி பாலாலயத்திலும் எந்தக் குறைவும் இன்றி , இறைவர் வீற்றிருந்து நமக்கு அருள் பாலிப்பார். ; அருளில் எவ்விதமான மாற்றமும் இல்லை. எனினும், உற்சவங்கள் போன்ற சில சிறப்பு வழிபாடுகளை
மூல ஆலயம் அமைத்த பிறகே செய்ய வேண்டும் என்றும் ஆகமங்கள் கூறுகின்றன.
ஆகவே ஓர் பாலாலயம் செய்யப் பட்டிருந்தாலும் வழமையான வழிபாடுகளை அங்கு இயற்றி இறைவனின் அருள் பெறுவோம்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
May be an image of temple
பாலாலயம் / பாலஸ்தாபனம் – சிறு குறிப்பு!
Scroll to top