தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
இரு தினங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் திருநீறு அணிவதன் முக்கியவத்தை பார்த்தோம்!!!
இன்று குங்குமத்தின் முக்கியத்துவம் அதன் மகிமையை பார்ப்போம்!
நாம் எல்லோரும் திருமண், விபூதி, குங்குமம் என்று நெற்றியில் வைப்பது வழக்கம். அவற்றை எப்படி வைப்பது, எப்போது வைப்பது, எதை வைப்பது என்றெல்லாம் நம் சாஸ்திரம் மிக அருமையாக வகுத்துக் கொடுத்துள்ளது. ஆனால் இன்று குங்குமம் படிப்படியாக பல குடும்பங்களில் மறைந்து ஓட்டுப் போட்டுகள் வலம் வருவதையும் காணலாம் நண்பர்களே!!!
குங்குமத்துக்கு மாற்றாக வேறுவகை பொட்டுகளை இட்டுக் கொள்ளவதில் தவறென்ன என்று சிலர் சிந்திக்கக்கூடும்!, டாக்டர் உங்களை ஒரு மாத்திரை சாப்பிடச் சொல்கிறார். அப்போது தான் உங்கள் நோய் குணமாகும் என்கிறார். நீங்கள், குறிப்பிட்ட அந்த மாத்திரையைதானே எடுத்துக்கொள்வீர்கள். அதற்குப் பதிலாக வேறு எதுவும் எடுக்க மாட்டீர்கள்தானே.
அப்படித்தான் நம் சாஸ்திரங்கள் எல்லா செயல்களுக்கும் ஆதாரத்தோடும் அர்த்தத்தோடும் பல வழிகாட்டுதல்களைக் கொடுத்துள்ளன. அதன்படியே நடந்தால் தான் நமக்கு அதற்கு உண்டான பலன் கிட்டும் என்று சொல்லியுள்ளன. சாஸ்திர வழிகாட்டல்களைக் கடைப்பிடித்தால் நமக்குத்தான் நன்மை.
குங்குமத்தை மோதிர விரலில் பவ்யமாக எடுத்து நம் இரு புருவங்களுக்கு இடையே உள்ள ஆக்ஞா சக்கரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். எல்லா சக்திகளும் ஒன்று இணையும் இந்த ஆக்ஞா சக்கரத்தைத் திலகம் வைத்துத் தூண்டுவதன் மூலம் நம் உடலெங்கும் ஒரு அதீத சக்தி பரவும் என்று ஆன்மிகம் சொல்கிறது.
உடலுக்கு அதிக யோக பலமும் ஞான பலமும் அளிக்கக் கூடிய இந்த புருவ மத்தியில் திலகம் வைப்பதே நல்லது. ஆக்ஞாவுக்கு நேர் மேலாகக் கூட சற்று தள்ளி திலகம் வைக்கலாம். குங்குமம்தான் வைக்கவேண்டும்.
குங்குமம் என்பது மஞ்சளால் உருவாவது. மஞ்சளுக்கு இயற்கையாகவே தீயசக்திகளைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. நமக்கு நேரெதிராக வரக்கூடிய தீய அதிர்வுகளை அப்படியே நிறுத்தக்கூடிய ‘ஸ்தம்பனம்’ செய்யக்கூடிய மகிமைகொண்டது மஞ்சள். அதுமட்டுமன்றி, சிவப்பு நிறம் கொண்ட குங்குமத்தால் பல மகிமைகள் உருவாகின்றன. சிவப்பு நிறத்துக்கென அதிர்வலை உண்டு. அது எதிரே உள்ளவரின் தீய எண்ணங்களைத் தடுக்க வல்லது. எனவே, எப்போதும் குங்குமத் திலகத்தையே இட்டுக்கொள்ளுங்கள்; நன்மைகள் உண்டாகும் .
தொகுப்பு: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின் இதழ் ஆசிரியர், www.modernhinduculture.com
குங்குமம் அணிவதன் முக்கியத்துவமும் அதன் பலன்களும்!!!