திருநீறு என்று அழைக்கப்பெறும் விபூதியின் மகிமை!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
திருநீறு என்று அழைக்கப்பெறும் விபூதியின் மகிமை!!!
மற்ற மற்ற சமயத்தினரை பார்த்தீர்கள் என்றால் தமது சமய அடையாளங்களை லேசில் மறைக்க மாட்டார்கள்! எங்களில் சிலர் என்ன செய்வார்கள்? திருநீறு பூச மாட்டார்கள், அப்படி பூசினால் அழித்து விடுவார்கள்! பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு திருநீறின் மகிமையை முக்கியத்துவத்தை அவர்கள் வளரும் போதே சொல்லிக் கொடுங்கள்!!!
நிலையான செல்வம், தீவினைகளை விலகி ஓடச் செய்யும் வல்லமை, கடன் இல்லாத வாழ்வு, நல்ல குடும்பம், ஆரோக்கியமான வாழ்வு, நல்ல நண்பர்களின் சேர்க்கை என்று அளவற்ற நற்பலன்களைத் தரும் சிவ ஐஸ்வர்யம்தான் விபூதி.
எப்போதும் திருமேனியில் திருநீற்றுடன் திகழும் வாரியார் சுவாமிகளிடம் ஒருமுறை இளைஞர் ஒருவர் துடுக்காக ஒரு கேள்வி கேட்டார். ‘`சுவாமி, நீங்கள் ஏன் தங்கள் உடல் முழுவதும் வெள்ளை அடித்துக்கொண்டிருக்கிறீர்கள்?’’ என்று கேட்டுவிட்டார்.
வாரியார் என்ன சொன்னார் தெரியுமா? ‘`சாதாரண மனிதர்கள் குடியிருக்கும் வீடு பிரகாசமாகவும் பூச்சித் தொல்லைகள் ஏற்படாமல் இருக்கவேண்டும் என்பதற்காக வெள்ளை அடிக்கிறோம். அப்படியிருக்க, என் உள்ளத்தில் இறைவன் குடியிருக்கிறான். அவன் குடியிருக்கும் உள்ளத்தைப் பெற்றிருக்கும் நான் அந்த உள்ளத்தை தூய்மையாக வைத்திருக்க இந்த உடலுக்கு நான் வெள்ளை அடித்துக் கொள்வதில் என்ன தவறு என்று பதிலுக்கு கேட்டாராம்!!!
ஆமாம்! திருநீறு ஆகிய விபூதி மகத்துவமானது. விபூதி என்றால் ஐஸ்வர்யம் என்று பொருள்- மகிமை என்று பொருள். விபூதி திருநீறு என்றும் அழைக்கப்படும். எந்தப் பொருளை நெருப்பில் போட்டாலும் முதலில் கறுப்பாகும்; மேலும் மேலும் நெருப்பில் சுட்டால் நீற்றுப் போய் சாம்பலாகிவிடும். சாம்பலின் நிறம் வெளுப்பு. அதை மீண்டும் நெருப்பில் இட்டாலும் அதன் நிறம் மாறாது. அதுவே நிறைவான நிலை. ஆக, நீரற்றுப் போனதே திருநீறு ஆகும்.
விபூதியிலும் ஐந்து வகை உண்டு. சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து ஐந்து வகை விபூதி தோன்றியது என்கின்றன ஞானநூல்கள். என்னென்ன தெரியுமா?
விபூதி – விரும்பிய செல்வத்தை அளிக்கும்.
பசிதம்- பரசிவத்துடன் நம்மை ஒன்றவைக்கும்.
பஸ்மம் – பாவங்களை விலக்கும்
சாரம் – துன்பங்களை நீக்கும்
ரக்ஷை – தீமைகள் அணுகாது.
உணர்வோம்!!! பின் பற்றுவோம்! பலனைப் பெறுவோம்!!!
தொகுப்பு: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணைய தள மின் இதழ் ஆசிரியர், www.modernhinduculture.com
No photo description available.
திருநீறு என்று அழைக்கப்பெறும் விபூதியின் மகிமை!!!
Scroll to top