சோமவாரம்! கார்த்திகைத்திங்கள் பற்றி அறிவோம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
சோமவாரம்! கார்த்திகைத்திங்கள் பற்றி அறிவோம்!
சோமன் என்றால் சந்திரன்! பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றாலும் சோமன்! சந்திரன் கார்த்திகை மாத சுக்ல பட்ஷ அஷ்டமியில் அவதரித்தவர்! சந்திரன் தோன்றிய இந்த கார்த்திகை மாத திங்கள், மேலும் சிவபெருமான் தனது திருமுடியில் சந்திரனை தாங்கிய தினம் ஆகிய முக்கிய காரணங்களினால் கார்த்திகைத் திங்கட் கிழமை பெருமை மிகு சோமாவாரமாகிறது!!!
சோமவாரம் என்பது திங்கள்கிழமை. சந்திரனுக்கு உரிய நாளாகக் குறிப்பிடப்படுகிறது. `சோம’ என்பது சந்திரனின் பெயர். நமது மனது நிலையானதாக இருந்தால்தான் நம்மால் அனைத்துக் காரியங்களையும் சரியாகச் செய்ய முடியும். அதற்குக் காரணமானவர் சந்திரன்.
மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோக்ஷயோ: சுக துக்கயோ:’ என்று கூறுவார்கள். `மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்கவேண்டாம்’ என்றும் கூறுவார்கள். நம்முடைய இன்பத் திற்கும், துன்பத்திற்கும், மோக்ஷத்திற்கும் உரிய காரணம் நம் மனதுதான். அந்த மனதை நாம் சரியாக வைத்திருந்தோமானால், இந்த உலகத்தில் நம்மால் சாதிக்க முடியாதது என்று ஒன்றுமில்லை. அவ்வகையில் மனத்தை இயக்கும் மகத்தான ஆற்றலைத் தரக்கூடியது இந்தச் சோமவார விரதம்.
`சோமன்’ என்று சிவபெருமானையும் குறிப்பிடுவார்கள். ஆம்! சிவபெருமான் தன் தலையில் சந்திரனைச் சூடிக்கொண்டிருக்கிறார். ஆகவே அவர் சோமசேகரர், சந்திரசேகரர் என்றெல்லாம் போற் றப்படுகிறார். அதுமட்டுமன்றி `சோமாஸ்கந்தர்’ என்ற ரூபத்தில் – சிவனும் சக்தியும் கந்தனும் சேர்ந்து திகழும் வடிவிலும் நாம் அவரை வழிபடுகிறோம். ஆதலால் சிவ-சக்தியைக் குறிக்கக்கூடிய சொல்லாகவும் இது விளங்குகிறது. `உமயா ஸஹ’ என்றால் உமையு டன் கூடிய சிவபெருமான் என்று அர்த்தம். `ஸோமா’ எனில் ஓம்காரத்தையே குறிப்பது ஆகும்.
உலகில் நாம் அனுபவிக்கும் நன்மைகளும் தீமைகளும் நம்மு டைய முன்ஜன்ம வினைகளால்தான் ஏற்படுகின்றன. இதை அறிந்து கொண்டால், நாம் செய்யும் பூஜைகளால் நமக்கு வரக்கூடிய பயன் களை உயர்வாகவே கருதுவோம்.
ஏனெனில் நாம் முற்பிறவிகளில் என்ன செய்தோம், எப்படி இருந்தோம் என்ற விவரங்கள் எவருக்கும் தெரியாது. எவ்வளவு பிறவிகள், எந்தப் பிறவியில் என்ன செய்தோம் என்ற கணக்கு எல்லாம்வல்ல ஈஸ்வரனுக்கு மட்டுமே தெரியும். `ஈசான: ஸர்வ வித்யானாம் ஈஸ்வர: ஸர்வ பூதாநாம்’ என்று சிவபெருமானைப் போற்றுகிறது வேதம். ஆம், அனைத்து ஜீவராசிகளுக்கும் தலைவன் அவர்தானே! அதுமட்டுமல்ல… உலகத்தில் உள்ள அனைத்து விதமான கலைகளுக்கும் அவரே தலைவர்.
ஆம், இவ்வுலகம் முழுவதும் சிவனும் சக்தியுமாகவே விரிந்திருக் கிறது. அவை இரண்டும் பிரிக்க முடியாதவை. அவற்றை நாம் உணர்வதால் நம்முடைய ஆற்றல் பெருகும். இதை நாங்களும் உணர்ந்து சோமாவாரப் பெருநாளில் எம்பெருமானையும் எம்பிராட்டியாரையும் வணங்கி அருள் பெறுவோம்!
தொகுப்பு; சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணைய தள மின் இதழ் ஆசிரியர், www.modernhinduculture.com
May be an image of 1 person and temple
சோமவாரம்! கார்த்திகைத்திங்கள் பற்றி அறிவோம்!
Scroll to top