பைரவ மூர்த்தியை க்ஷேத்ரபாலகர் எனப் போற்றுவது ஏன்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
பைரவ மூர்த்தியை க்ஷேத்ரபாலகர் எனப் போற்றுவது ஏன்?
வைரவர் என்றும் பைரவர் என்றும் ஷேத்ர பாலகர் என்றும் பலவாறு வைரவப் பெருமானை வணங்குகிறோம்.
`பைரவா’ என்று கூப்பிட்டதும் ஓடிவந்து காக்கக்கூடிய கடவுள் பைரவர் ஸ்வாமி. நம் பயத்தைப் போக்கி அமைதி தரக்கூடியவர் பைரவர். உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் நன்மை அடைய வேண்டி, அர்ச்சகர்பெருமக்களால் ஆலயம்தோறும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பூஜைகளால் ஏற்படும் சாந்நித்தியத்தைக் காப்பாற்றி அதன் மூலம் சகல ஜீவராசிகளையும் காப்பாற்றுவதால் இவரை க்ஷேத்ர பாலகர் என்று கூறுவர்.
இவ்வுலகை ஒரே இடமாக எண்ணினோம் எனில், இந்த இடத்தை – க்ஷேத்திரத்தைக் காக்கும் கடவுளாக (பாலனம் – காப்பாற்றுதல்) (ஷேத்திரம் என்றால் இடம்). பைரவர் விளங்குகிறார். நாம் நம் உடலைச் சார்ந்து இருக்கும் உயிரை ஒரு க்ஷேத்திரத்தில் இருக்கும் உயிர் என்று கொண்டோமானால், அந்த க்ஷேத்திரமாகிய நம் உடலை உச்சி முதல் உள்ளங்கால் வரை காக்கும் தெய்வமாகத் திகழ்பவர் பைரவமூர்த்தி.
தர்மத்துக்கு விரோதமாக யார் சென்றாலும் அவர்கள் அழிக்கப்படுவர். என்பதை உணர்த்துவது பைரவரின் திருவடிவம்.போற்றுதலுக்கு உரிய சிவமூர்த்தங்கள் 64 என்றும் 25 என்றும் சிறப்பிக்கப்படுகின்றன. இந்த மூர்த்தங்களில் ஒருவராக பைரவர் விளங்குகிறார்.
அனைத்து காலங்களிலும் மஹா காளியுடன் இணைந்து தர்மத்தை அவர் காப்பாற்றுவதால் அவரை காலபைரவர் என்று போற்றுவர். `வ’, `ப’ என்ற எழுத்துக்கள் சில இடங்களில் மாற்றிப் பயன்படுத்தப் படுவதால் பைரவரை சிலர் வயிரவர் என்றும் போற்றுவர்.
தொகுப்பு: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின் இதழ் ஆசிரியர் www.modernhinduculture.com
No photo description available.
பைரவ மூர்த்தியை க்ஷேத்ரபாலகர் எனப் போற்றுவது ஏன்?
Scroll to top