தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
இன்று ஓம் எனப்படும் பிரணவ மந்திர மகிமையை பார்ப்போம்!
எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த ஒலி தான் பிரணவம் என்றழைக்கப்படுகிறது. நம் வாயைத் திறந்து உள்ளிருந்து மூச்சுக் காற்றை வெளியிடும் போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலியானது பிறக்கின்றது. அந்த ஒலியின் கடைசியில் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது. இப்படி பிறக்கும் ”ஓம் – ஓம்” என்ற ஒலியை தான் பிரவணம் என்று கூறுகிறார்கள்.
இந்த பிரவண ஒலி உலகம் தோன்றுவதற்கு முன்பு நிலவி இருந்தது என்றுதான் நூல்கள் கூறுகின்றன.
‘ஓம்’ – இந்த ஒலியில் உலகம் முழுவதும் அடங்கியிருப்பதாக நம் ரிஷிகள் உணர்ந்தும் அனுபவித்தும் கூறியுள்ளார்கள். ‘ஓம் இதிதகும் ஸர்வம்’ என்று கூறி, `அனைத்தும் ஓம்காரமே’ என்று விளக்குகிறது வேதம்.
ஒரு மனிதனுக்கு எப்படி தலை முக்கியமோ, அதுபோன்று ஓம்காரமானது அனைத்து மந்திரங்களுக்கும் தலை போன்றது. எனவேதான் எந்தத் தெய்வத்தின் மூல மந்திரமாக இருந்தா லும் ‘ஓம்’ இல்லாமல் இருப்பதில்லை. மந்திரங்களின் ஓரெழுத்து வெளிப்பாடே ஓம்காரம். மந்திரங்களை உபதேசமாகப் பெற்றவர்கள் அனைவரும், மூல மந்திரங்களை ஜபிப்பதும், தெய்வ ஸ்தோத்திரங்களையும், ஓம்காரத்தையும் உச்சரிப்பதும் வழிவழியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறை.
சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோபாவம் மற்றும் அனுக்ரஹம் என்ற ஐந்தும் இந்த ஓம்காரத்தினுள் அடக்கம்.
இந்த மந்திரத்தை உச்சரித்தால் நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் தூண்டப்பட்டு நமக்குள் பெரிய மாறுதலை ஏற்படுத்தும். நமது கவனத்தைச் சிதறவிட செய்யாது. மன அழுத்தம் என்னும் பாதிப்பிலிருந்து மீள செய்யும். ஆம் மனிதனுக்குள் எப்போதும் தெய்வ சக்தியும், அசுர சக்தியும் போட்டி போட்டு கொண்டே இருக்கும். அசுரசக்தியை வெல்லும் சக்தி தான் ஓம் எனும் மந்திரம்.
தொகுப்பு : சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின் இதழ் ஆசிரியர், www.modernhinduculture.com
ஓம் எனப்படும் பிரணவ மந்திர மகிமையை பார்ப்போம்!