ஆகமவிற்பன்னர், கவிஞர்,வில்லிசை வேந்தர் , கலைமாமணி டாக்டர் . சாம்பசிவ சோமஸ்கந்த குருஜீ அவர்களுக்கு

இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனத்தின் வாழ்த்து:
ஈழத் திருநாட்டிலே யாழ்ப்பாணத்து நாயன்மார்க்கட்டிலே உதித்த சூரியன்! கலைஞானி , ஆகமச்சித்திரங்கள் 9 பாகங்கள் உட்பட ,15 க்கும் மேற்பட்ட ஆகம நூல்களை எழுதிய ஆகமவிற்பன்னர், கவிஞர்,வில்லிசை வேந்தர் , கலைமாமணி டாக்டர் . சாம்பசிவ சோமஸ்கந்த குருஜீ அவர்களுக்கு அவரின் ஆகம, சமய கலைத் தொண்டினை பாராட்டி மதுரை காமராஜ் பல்கலைக் கழகம் டாக்டர் சோமாஸ்கந்த குருஜீ அவர்களுக்கு ” சிவஞான கலாநிதி ” என்ற பட்டம் அளித்து கெளரவித்துள்ளமை அறிந்து இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம் (Modern Hindu Culture) தனது பெரு மகிழ்ச்சிகளையும் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் பெருமைப்படுகிறது!
டாக்டர் சாம்பசிவ சோமாஸ்கந்த குருஜீ அவர்கள் மென் மேலும் தனது ஆகம, தமிழ்,சமய கலைத் தொண்டினை தொடர பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல சுன்னாகம் கதிரமலை ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமானை வேண்டுகிறோம்.
Modern Hindu Culture தலைமையகம் , சுன்னாகம்.
டாக்டர் நா. சோமஸ்கந்த சிவாச்சாரியார். (நிறுவனர் ) டாக்டர் நா, சர்வேஸ்வர சிவாச்சாரியார்.( தலைவர்)
ஆகமவிற்பன்னர், கவிஞர்,வில்லிசை வேந்தர் , கலைமாமணி டாக்டர் . சாம்பசிவ சோமஸ்கந்த குருஜீ அவர்களுக்கு
Scroll to top