விவாகத்தின் போது முக்கியமான சப்தபதி!!!

ஒரு விவாகம் நடைபெறும்போது மாங்கல்ய தாரணம் மட்டுமே பிரதானம் என்று எண்ணிவிட வேண்டாம்! மாங்கல்யதாரணம் முடிந்தவுடன் திருமணம் முற்றுப் பெறவில்லை !!!
இந்து திருமண சாஸ்திரத்தின்படி மாங்கல்யதாரணத்துக்குப் பின் முக்கியமானதாக பாணிக்ரஹணமும், ஸப்தபதியுமே பிரதானமாகிறது! வேதோக்தமான திருமணத்தில் ,. தாலி கட்டிவிடுவதால் திருமணம் நடந்து முடிந்துவிட்டதாக சாஸ்திரம் மட்டுமல்ல, சட்டமும் ஏற்றுக்கொள்ளவில்லை. மாங்கல்யதாரணம் என்றழைக்கப்படும் தாலி கட்டுதல் முடிந்தவுடன் பெண்ணின் கரத்தினைப் பற்றி மாப்பிள்ளை மந்திரம் சொல்லி அந்தப்பெண்ணை தன் வாழ்நாள் முழுவதும் வைத்துக் காப்பாற்றுவதாக உறுதியளிப்பார். இந்த நிகழ்விற்கு பாணிக்ரஹணம் என்று பெயர். பாணி என்றால் கரம் என்று பொருள்.
பாணிக்ரஹணம் என்றால் கரத்தினைப் பற்றுதல் என்று பொருள். இதனைத் தொடர்ந்து அந்த மணமகன் சபையோர் முன்னிலையில் தான் கரம் பற்றிய பெண்ணின் கால்விரலைப் பிடித்து ஒவ்வொரு அடியாக ஏழு அடி எடுத்து வைக்கச் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு அடிக்கும் உரிய மந்திரத்தைச் சொல்லி ஊரறிய அவளது பாதத்தினைப் பற்றி அவன் அந்தப் பெண்ணிற்குச் செய்யும் உபதேசம் ‘ஸப்தபதி’ என்று அழைக்கப்படும். இந்த இரண்டும் முறையாக நடந்தால் மட்டுமே இந்து திருமணச் சட்டத்தின்படியும், சாஸ்திரப்படியும் அவர்களது திருமணம் நடந்ததாக ஏற்றுக்கொள்ளப்படும். மெட்டி அணிவித்தல் என்பது அந்தப் பெண் திருமணமானவள் என்பதற்கான பிரதானமான அடையாளச் சின்னமாகிறது!.
May be an image of one or more people
prepared by:
panchadcharan swaminathasarma,
E Magazine Editor,
Modern Hindu Culture . Org.
www.modernhinduculture.com
விவாகத்தின் போது முக்கியமான சப்தபதி!!!
Scroll to top