பிராமணருக்கு மனதார தானம் கொடுப்போம்.

குடும்ப அபிவிருத்தி, இறைவன் அருள், பெரியவர் ஆசி, வம்ச செழிப்பு, ஆயுள் கெட்டி , இப்படி பல விடயங்களை வேண்டி பிராமனருக்கு தானம் கொடுக்கப் படுகிறது. நல்லதாக கொடுங்கள், ”ஐயருக்குத்தானே” என்ற மனோபாவம் வேண்டாம். மனம் திருப்தியாக செய்யுங்கள்!
இருபது தானங்கள்: – தத்தமது சக்திக்கேற்ப இருபது தானங்களைச் செய்ய வேண்டுமென சாஸ்திர நூலகளில் கூறப் பட்டுள்ளன.விதிகளில் சொல்லப்பட்டுள்ளது.
‘‘சிவபெருமான் மீது ஆழமான பக்தி கொண்ட அந்தணர்களை அழைத்து அவர்களை மணைப்பலகையில் அமர்த்த வேண்டும். அர்க்யம் தரவேண்டும். சந்தனம் தரவேண்டும்; மலர்கள் இடவேண்டும்; பின்னர் அவர்களுக்கு 20 தானங்கள் தரவேண்டும்’’ என்கிறது குடந்தைப் புராணம்.
1. பூமிதானம்
2. கன்னிகாதானம் (இதற்காகப் பொருளைத் தானம் செய்வது)
3. சொர்ண (பொன்) தானம்
4. யக்ஞோபவீத (பூணூல்) தானம்
5. கோதானம்
6. அசுவ தானம் (குதிரை)
7. விருஷப தானம் (காளை மாடு)
8. அன்னதானம்
9. பாயச தானம்
10. தான்ய தானம்
11. கல்பக விருட்ச தானம் (தென்னை)
12. குப்த தானம் (பூசணிக்காய், பலாப்பழம், இளநீர் இவற்றில் ஏதாவது ஒன்றில் ஒரு ரூபாய் அகலத்திற்குத் துளையிட்டு அதற்குள் ரத்தினம், சொர்ணம், வைரம், வைடூரியம், வெள்ளி, முத்து முதலியனவற்றைப் போட்டுத் தோலினால் மூடி தட்சிணையுடன் கொடுப்பது குப்த தானம்)
13. சந்தன தானம்
14. நல்முத்து தானம்
15. நவரத்தின தானம்
16. தேன் தானம்
17. உப்பு தானம்
18. எள் தானம்
19. மாதுளம்பழம் தானம்
20. சோடச பல தானம் (பதினாறு விதமான பழங்களை வைத்துப் 16 பேருக்குத் தானம் செய்வது)
– என்று வடமொழியில் உள்ள புராண நூல்கள் இருபது தானங்களைப் பட்டியலிடுகின்றன. திருக்குடந்தைப் புராணத்தில் இந்தத் தானங்களின் பெயர்கள் மற்றும் விவரங்களில் மாறுபாடு உண்டு. குடந்தைப் புராணத்தில் உள்ள விவரம் வருமாறு:
‘‘பசுதானம், கன்யாதானம், சுவர்ணதானம், கவிகை (குடை) தானம், வஸ்த்ர (ஆடை) தானம், உபவீதம் (பூணூல்) தானம், அன்னதானம், பாயச தானம், கற்பகத்தரு தானம், தான்ய தானம், விபூதி தானம், கந்த தானம், நவமணி தானம், தேன் தானம், பழவகை தானம், தாம்பூல தானம் ஆகியவற்றையும் தானமாக கொடுக்கலாம் என்று திருக்குடந்தைப் புராணத்தில் நானதான விதிப்படலத்தில் இருக்கும் பாடல்கள் தெரிவிக்கின்றன.
.
தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர்,( E Magazine Editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture . Org
www.modernhinduculture.com
பிராமணருக்கு மனதார தானம் கொடுப்போம்.
Scroll to top